ஒரு கிராமத்தில் ஒரு தாய் தனது மகனை அடிஅடியென்று அடித்துக்
கொண்டிருந்தார்.தனது மகன் ஏதோ சொல்ல முயன்றும் அதை
காதில் போட்டுக்கொள்ளாமல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அவ்வூர் பள்ளிக்கூட ஆசிரியர் இதை கவனித்தார்.அவருக்கு அந்தப்பையனை நன்றாகத் தெரியும்.அடடா இவன் நன்றாகப் படிக்கக் கூடிய பையனாயிற்றே அவனை ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்பதன் காரணத்தை அறிய அவர்கள்
அருகே விரைந்தார்.அந்த அம்மாவை அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு காரணத்தை கேட்டார்.அந்த படிப்பறிவில்லாத தாய் சொன்னது -இவன் நல்லா படிக்கனுமின்னு நா எந்த வேலையும் சொல்லறதில்ல ஆனா இவ நல்லாவே படிக்க மாட்டிங்கறான் பக்கத்து வீட்டுப் பையன் எப்பவும் ஊர்
சுத்தினாலும் 23 ரேங்க் வாங்கிருக்கான் இவன்
1 ரேங்க் தான்
சார் வாங்கிருக்கான்
என அழ
ஆரம்பித்தாள்...
Thursday, July 11, 2013
கல்விக்கண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment