''நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு "
வான்இன்றி அமையாது ஒழுக்கு "
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது.தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது.
மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு மூல காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான்.நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம் . நதியின் பிறப்பிடம் அருவி . அருவியின் பிறப்பிடம் மலை உச்சி.வனம் அதிகம் இருக்கும் மலை உச்சியில் ஒரு வகையான மண் உள்ளது . அந்த மண், அங்கு விழும் இலைச் சருகுகளுடன் இணைந்து ஒரு புது வகையான மண்ணாக மாறிவிடுகிறது .அந்த மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் , அவ்வளவு மழைநீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது.பிறகு பிடித்து வைத்த மழை நீரை சொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது.இந்தச் சொட்டுகள் இணைந்து சிறு நீரூற்றாக மாறுகிறது.சிறு நீரூற்றுகள் இணைந்து அருவியாக மாறுகிறது.அருவி நதியாகிறது.
இந்த நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவதன் மூலம் நீர் கடலில் கலந்து வீணாகாமல் பாதுகாக்க முடிகிறது.''இயற்கையினை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்'' என்கின்றனர் சூழலியலாளர்கள்.எனவேதான், இயற்கையான நீர்வளத்தைப் பாதுகாக்க அணைகள் கட்ட
வேண்டியுள்ளது.அவ்வாறு தமிழ்நாட்டில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
வ.எண் | பெயர் | ஆண்டு | கொள்ளளவு (மி.கன அடி) | மாவட்டம் |
---|---|---|---|---|
1. | வீராணம் ஏரி | பழைமை -யானது | 1465.00 | கடலூர் |
2 | செம்பரப்பாக்கம் ஏரி | பல்லவர் காலம் | 3120.00 | காஞ்சிபுரம் |
3. | ரெட்கில்ஸ்(புழல் ஏரி) | 1856 | 3300.00 | திருவள்ளூர் |
4. | சோழவரம் ஏரி | 1877 | 881.00 | திருவள்ளூர் |
5. | வெலிங்டன் ஏரி | 1923 | 2580.00 | கடலூர் |
6. | பூண்டி நீர்தேக்கம் | 1944 | 3214.00 | திருவள்ளூர் |
7. | சாத்தனூர் அணை | 1958 | 7321.00 | திருவண்ணாமலை |
8. | கிருஷ்னகிரி அணை | 1958 | 1666.00 | தர்மபுரி |
9. | விடூர் அணை | 1959 | 605.00 | விழுப்புரம் |
10. | கோமுகிநதி அணை | 1965 | 560.00 | விழுப்புரம் |
11. | மணிமுத்தாறுநதி அணை | 1970 | 737.00 | விழுப்புரம் |
12. | சின்னார் அணை | 1977 | 500.00 | கோவை |
13. | பாம்பாறு அணை | 1983 | 500.00 | தர்மபுரி |
14. | தும்பளஹள்ளி அணை | 1983 | 131.00 | தர்மபுரி |
15. | வாணியாறு அணை | 1985 | 418.00 | தர்மபுரி |
16. | கேசர்குழிஹல்லா அணை | 1985 | 134.00 | தர்மபுரி |
17. | சூலகிரி சின்னார் அணை | 1986 | 81.00 | கிருஷ்னகிரி |
18. | தொப்பையாறு அணை | 1986 | 299.00 | தர்மபுரி |
19. | நாகவதி அணை | 1986 | 134.00 | தர்மபுரி |
20. | கெலவரப்பள்ளி அணை | 1993 | 481.00 | தர்மபுரி |
21. | ராஜாதோப்பு அணை | 1997 | 20.00 | வேலூர் |
22. | மோர்தானா அணை | 2001 | 261,00 | வேலூர் |
23. | மார்கண்டநதி அணை | 2005 | 87.23 | திருவண்ணாமலை |
24. | செம்பகத்தோப்பு அணை | 2007 | 287.20 | திருவண்ணாமலை |
25. | வரட்டாறு வள்ளிமதுரை அணை | 2007 | 110.33 | தர்மபுரி |
வ.எண் | பெயர் | ஆண்டு | கொள்ளளவு (மி.கன அடி) | மாவட்டம் |
---|---|---|---|---|
26. | ஆண்டியப்பனூர் ஓடை | 2007 | 112.20 | வேலூர் |
27. | பெரியாறுஅணை | 1897 | 15662.00 | கன்னியாகுமரி |
28. | பேச்சிப்பாறை அணை | 1906 | 5406.00 | கன்னியாகுமரி |
29. | பெருஞ்சாணி அணை | 1952 | 2890.00 | கன்னியாகுமரி |
30. | மணிமுத்தாறு அணை | 1958 | 4047.00 | திருநெல்வேலி |
31. | வைகை அணை | 1959 | 6143.00 | மதுரை |
32. | சக்தியாறு அணை | 1965 | 56.00 | மதுரை |
33 | மஞ்சளாறு அணை | 1967 | 477.00 | தேனி |
34. | சிற்றாறு-I | 1972 | 600.00 | கன்னியாகுமரி |
35. | சிற்றாறு - II | 1972 | 393.00 | கன்னியாகுமரி |
36. | கடனா நதி அணை | 1974 | 352.00 | திருநெல்வேலி |
37. | இராமாநதி அணை | 1974 | 152.00 | திருநெல்வேலி |
38. | பிளவக்கல் பெரியாறு அணை | 1976 | 192.00 | விருதுநகர் |
39 | பிளவக்கல் கோவிலாறு அணை | 1976 | 133.00 | விருதுநகர் |
40. | கருப்பாநதி அணை | 1977 | 185.00 | திருநெல்வேலி |
41. | மருதாநதி அணை | 1979 | 189.00 | திண்டுக்கல் |
42. | குண்டாறு அணை | 1983 | 25.00 | திருநெல்வேலி |
43. | குல்லூர் சந்தை அணை | 1984 | 127.00 | விருதுநகர் |
44. | வெம்பக்கோட்டை அணை | 1985 | 399.00 | விருதுநகர் |
45. | ஆனைக்குட்டம் அணை | 1989 | 126.00 | விருதுநகர் |
46. | கோல்வார்பட்டி அணை | 1992 | 176.00 | விருதுநகர் |
47. | நம்பியாறு அணை | 2000 | 82.00 | திருநெல்வேலி |
48. | பொய்கையறு அணை | 2000 | 105.00 | திருநெல்வேலி |
49. | சோத்துப்பாறை அணை | 2001 | 100.00 | தேனி |
50. | அடவிநயினார் அணை | 2003 | 174.00 | திருநெல்வேலி |
வ.எண் | பெயர் | ஆண்டு | கொள்ளளவு.(மி.கன அடி) | மாவட்டம் | |
---|---|---|---|---|---|
51. | வடக்குப்பச்சையாறு அணை | 2003 | 442.00 | திருநெல்வேலி | |
52. | கொடுமுடியாறு அணை | 2003 | 122.00 | கரூர் | |
53. | சண்முகாநதி அணை | 2004 | 79.56 | தேனி | |
54. | நகரியாறு சாஸ்தாகோவில் | 2004 | 36.47 | விருதுநகர் | |
55. | பவானிசாகர் அணை | 1955 | 32800.00 | ஈரோடு | |
56. | குண்டேரிப்பள்ளம் | 1978 | 108.00 | ஈரோடு | |
57. | வரட்டுப்பள்ளம் | 1978 | 140.00 | ஈரோடு | |
58. | பெரும்பள்ளம் | 1990 | 232.00 | ஈரோடு | |
59. | அமராவதி அணை | 1958 | 4047.00 | கோவை | |
60. | உப்பாறு அணை | 1968 | 328.00 | ஈரோடு | |
61. | பாலாறு பொருந்தலாறு அணை | 1978 | 1524.00 | திண்டுக்கல் | |
62. | வட்டமலைக்கரை ஓடை | 1978 | 268.00 | திருப்பூர் | |
63. | பரப்பலாறு அணை | 1974 | 198.00 | திண்டுக்கல் | |
64. | குதிரையாறு அணை | 1990 | 253.00 | திண்டுக்கல் | |
65. | நொய்யல் ஆத்துப்பாளையம் | 1991 | 235.00 | கருர் | |
66. | குடகனாறு அணை | 1993 | 434.00 | திண்டுக்கல் | |
67. | மேல் நீராறு | 1975 | 39.00 | கோவை | |
68. | கீழ் நீராறு | 1982 | 174.00 | கோவை | |
69. | பரம்பிக்குளம் அணை | 1967 | 17820.00 | கோவை | |
70. | தூணக்கடவு அணை | 1965 | 557.00 | கோவை | |
71. | பெருவாரிப்பள்ளம் | 1971 | 620.00 | கோவை | |
72. | ஆழியாறு அணை | 1962 | 3864.00 | கோவை | |
73. | திருமூர்த்தி அணை | 1967 | 1935.00 | கோவை | |
74. | நொய்யல் ஒரத்துப்பாளையம் | 1992 | 616.00 | திருப்பூர் | |
75. | வரதமாநதி அணை | 1978 | 111.00 | திண்டுக்கல் |
வ. எண் | பெயர் | ஆண்டு | கொள்ளளவு (மி.கன அடி) | மாவட்டம் |
---|---|---|---|---|
76. | சோலையாறு அணை | 1971 | 5385.00 | கோவை |
77. | நங்கஞ்சியாறு அணை | 2007 | 254.27 | திண்டுக்கல் |
78. | நல்லதங்காள் ஓடை | 2007 | 223.18 | திருப்பூர் |
79. | மேட்டூர் அணை | 1934 | 95659.92 | சேலம் |
80. | காரியாகோயில் அணை | 1993 | 190.00 | சேலம் |
81. | ஆனைமடுவு அணை | 1993 | 267.00 | சேலம் |
82. | பொன்னியாறு அணை | 1974 | 120.07 | கருர் |
83. | சித்தாமலை அணை | 1987 | 227.00 | அரியலூர் |
84. | உப்பாறு அணை | 1986 | 80.16 | திருச்சி |
85. | இருக்கன்குடி அணை | 2009 | 5012.00 | விருதுநகர் |
86. | பாபநாசம் அணை | 1944 | 5500.00 | திருநெல்வேலி |
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது கி.பி.இரண்டாம் நூற்றாண்டு கரிகாலனால் கட்டப்பட்டது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது.கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்டது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது மேலணை என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும்.கீழணை என்பது கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
நீலகிரி மலையில் உள்ள அணைகள் மற்றும் நீர் மின் திட்டங்கள் குறித்தும் பொதுவான தகவல்களைத் தெரிந்து கொள்வோம். இம்மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு இரு பகுதிகளாகப் பிரிந்து வருகிறது. கிழக்குப் பகுதியில் முக்குறுத்தி, பைக்காரா, அணைகள் வழியாக சிஸ்கார நீர்மின் நிலையம், அதன் கீழே மோயர் நீர்மின் நிலையம் எனக் கடந்து பவானி அணையை அடைகிறது.
இன்னொரு பகுதி தென்மேற்குத் திசையில் பயணித்து குந்தா 1,2,3,4,5 என நீர் மின் நிலையங்களை கடந்து மேட்டுப்பாளையம் வழியாகப் பாய்ந்து பவானி அணையில் சேர்கிறது -நீலகிரி மலையில் இருபதுக்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன.
அவற்றில் சில.
1.முக்குறுத்தி அணை
2.பைக்காரா அணை
3.சாண்டிநல்லா அணை
4.கிளன்மார்கன் அணை
5.மாயார் அணை
6.அப்பர்பவானி அணை
7.பார்சன்ஸ்வேலி அணை
8.போர்த்தி மந்து அணை
9.அவலாஞ்சி அணை
10.எமரால்டு அணை
11.குந்தா அணை
12.கெத்தை அணை
13.பில்லூர் அணை
14.மரவகண்டி அணை
இன்னும் சில....
பொள்ளாச்சி
15.காடம்பாறை அணை
தேனி
14.ஹைவேவிஸ் அணை
15.மணலாறு அணை
16.தூவாணம் அணை
17.வெண்ணியாறு அணை
18.இரவங்கலாறு அணை
இவை மட்டுமல்லாமல் இன்னும் நிறைய அணைகள் உள்ளன.மழை நீரை சேமிப்போம்.நீர் வளம் காப்போம்.