Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, December 13, 2013

இந்திய தேசியக் கொடி


நாம் நம் தேசியக்கொடியின் அளவுகள் குறித்த விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள் தேசியக்கொடியினை தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும்போதும் அரசும், அரசு நிறுவனங்களும் பயன்படுத்தும்போதும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிகள்.
் * தேசியக்கொடி செவ்வக வடிவில், நீள அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேல்புறம் காவி வண்ணம், நடுவில் வெண்மை, கீழ்ப்புறம் பச்சை, நடுவில் உள்ள வெண்மையின் நடுவில் நீலநிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் என்ற வடிவத்தில் இருக்க வேண்டும்.
* தேசியக்கொடி, கம்பளி, கதர் மற்றும் பட்டுத் துணிகளில் கையினால் நெய்யப்பட்டதாகவே இருக்கவேண்டும்.
* செவ்வக வடிவில் 3:2 என நீள அகலம் எனப் பொதுவில் இல்லாது கீழ்க்கண்ட அளவுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
* 6300 x 4200, 3600 x 2400, 2700 x 1800,1350 x 900, 900x 600, 450 x 300, 225 x 150, 150 x 100 (அளவுகள் மில்லி மீட்டரில்.)
* தனிமனிதர், தனியார் நிறுவனங்கள் தேசியக்கொடியினை, தேசியச் சின்னங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அதற்குரிய மரியாதையுடனும் மதிப்புடனும் பயன்படுத்த தடையில்லை. இதன்படி, தேசியக்கொடியினை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாகாது. பிறருக்கு மரியாதை செய்யும்போது தேசியக்கொடியினைத் தாழ்த்திப் பிடித்து வணக்கம் சொல்லுதல் கூடாது.
* பொது இடத்தில் தேசியக்கொடியினைக் கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்
* எந்த ஒரு பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாக தேசியக்கொடியினைப் பயன்படுத்தலாகாது. (அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் மறைந்தவரின் உடலை, ராணுவ வீரர் இறந்தால் அவரது உடலை தேசியக்கொடி கொண்டு போர்த்துதல் இதில் அடங்காது.)
* தேசியக்கொடியை, அணியும் உடை, பயன்படுத்தும் கைத் துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது.
* தேசியக்கொடி மண்ணில்/ தரையில்/தண்ணீரில் படுபடியாக விடக்கூடாது.
* தனியார் கல்வி நிலையங்களில், நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் போது, கிழிந்த, சேதமான நிலையில் இருக்கும் கொடி பயன்படுத்தலாகாது; மிகவும் பிரதானமான இடத்தில் கொடி ஏற்றப்பட வேண்டும்; தேசியக்கொடியுடன் பிற கொடிகள் ஏற்றப்படலாகாது. தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பம் மற்றும் அதன் பீடத்தின் மீது மாலைகளோ அல்லது வேறு பொருட்களோ வைக்கலாகாது.
* தேசியக்கொடியினை காகிதத்தில் செய்து, விருந்தினர் வருகையின்போது மரியாதை நிமித்தம் அசைத்து வரவேற்பு நல்கலாம்.
* சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும். அது போல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கி வைக்கப்படவேண்டும்.
* கல்வி நிறுவனங்களில், தேசியக்கொடி முக்கிய தினங்களில் ஏற்றப்படும்போது, கூடிநிற்பவர் கொடிக்கு எதிர்ப்புறம் ஒரே பக்கத்தில் இருக்கவேண்டும். கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பத்தினை சூழ்ந்து நிற்கலாகாது.
* அரசு கட்டடங்களில் பிறநாட்டுக் கொடி அல்லது ஐ.நாவின் கொடியுடன் நமது தேசியக்கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்களில், கட்டடத்தின் எதிரே நின்று கட்டடத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கட்டடத்தின் இடதுமூலையில் கொடி வருமாறு ஏற்ற வேண்டும்.
* பலநாட்டுக் கொடிகள் ஏற்றப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் (உதாரணமாகப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம்) கட்டடத்தில், நமது தேசியக்கொடியே முதலில் ஏற்றப்பட்டு, கடைசியில் இறக்கப்பட வேண்டும். பிறநாட்டு ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்து அகரவரிசைப்படி கொடிகளின் வரிசை அமைய வேண்டும்.
* அரசு விருந்தினராக இந்தியாவில் பயணிக்கும் வெளிநாட்டுப் பிரமுகரின் காரில், வலப்புறம் நம் தேசியக்கொடியும், இடப்புறம் அவரது நாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட வேண்டும்.
* தலைவர்கள் மறைவின்போது, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் இவர்களது மறைவின்போது நாடெங்கும்; லோக்சபா சபா நாயகர், உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி இவர்கள் மறைந்தால் டெல்லி நகரிலும்; மத்திய அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரம் மற்றும் அவர் சார்ந்த மாநிலத் தலைநகரிலும்; மத்திய அரசின் இணை அமைச்சர்/ துணை அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரிலும்; மாநில அரசின் அல்லது யூனியன் பிரதேச கவர்னர் / முதலமைச்சர் / மறைந்தால் அந்த மாநில யூனியன் பிரதேசம் முழுவதும்; மாநில / யூனியன் பிரதேச அமைச்சர் மறைந்தால் அந்த மாநில / யூனியன் பிரதேச தலை நகரத்திலும் அரைக் கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும்.
* ஆயினும் தலைவர்கள் மறைவு, அடக்கம், எரியூட்டும் தினம் இவை, குடியரசு தினமான ஜனவரி 26, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, தேசப்பிதா காந்தியாரின் பிறந்த தினமான அக்டோபர் 2, தேசிய் வாரமான ஏப்ரல் 6 முதல் 13 வரை (ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை போற்றும் விதமான தேசிய வாரம் இது), மாநில உதயம் கண்ட நாட்கள் போன்றவற்றில் ஏற்பட்டால், தலைவரின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் மட்டுமே தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். அதுவும் அந்த நாளில் அவரது உடல் தகனத்திற்காக / அடக்கத்திற்காக அந்தக் கட்டடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டபின் மீண்டும் தேசியக்கொடி முழுக்கம்பத்திற்கு உயர்த்தப்படவேண்டும்.
* காலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பு தலைவர்களின் மரணச் செய்தி கிடைக்கப்பெற்றால், உடன் தேசியக்கொடி அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட வேண்டும். அன்றைக்கு மாலை அடக்கம் / தகனம் நடைபெறாது இருப்பின் மறுநாளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவேண்டும். மறுநாள் பறக்கவிடப்படும் போது, தேசியத் துக்கம் பின்பற்றப்படும் என தொடர்புடைய அரசு அறிவிக்கும் நிலையில், அந்த நாட்களில், கொடி முழுக்கம்பத்துக்கு ஏற்றப்பட்டு பின்னர் அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட வேண்டும். அன்று மாலை கொடி இறக்கப்படும்போது அரைக்கம்ப நிலையிலிருந்து இறக்கப்படலாகாது; அரைகம்ப நிலையில் இருந்து, முழுக்கம்ப நிலைக்கு கொடியினை உயர்த்தி ஏற்றி, அதன் பின்னரே இறக்க வேண்டும்.
தேசிய கொடியை மதிப்போம் இந்தியனாய் இருப்போம்.

Tuesday, July 23, 2013

இந்தியாவின் உயரிய விருதுகள்

குடியியல்:

பன்னாட்டளவில்

•காந்தி அமைதிப் பரிசு

தேசியளவில்:

•பாரத ரத்னா 
( விபரம்   இங்கே காண்க)
•பத்ம விபூசன்
• பத்ம பூசன்
• பத்மசிறீ
•தேசிய வீரதீர விருது

துறை வாரியாக

இலக்கியம்:

•சாகித்ய அகாடமி (கூட்டாளர்)
• சாகித்திய அகாதமி விருது
• ஞான பீட விருது

திரைப்படம்:

•தாதாசாகெப் பால்கே விருது ·

தேசிய திரைப்பட விருதுகள:

தங்கத்தாமரை

•சிறந்த திரைப்படம்
•சிறந்த நடிகர்
•சிறந்த நடிகை
•சிறந்த இயக்கம்
•சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல படம்
•சிறந்த குழந்தைகள் படம்

வெள்ளித் தாமரை விருது:

•அரசியலமைப்பின் எட்டாவது செட்யூலில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்கள்

கலைகள்:

•சங்கீத நாடக அகாதமி விருது ·

விளையாட்டு:

•ராஜீவ் காந்தி கேல் ரத்னா
• அர்ஜுனா விருது
• துரோணாச்சார்யா விருது (பயிற்றுகை)
• தியான் சந்த் விருது (வாழ்நாள் சாதனை)

அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம்:

•சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

நடுவண் இந்தி மேம்பாடு:

•மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது
•கங்கா சரண் சிங் விருது
•கணேஷ் இந்தி வித்யார்த்தி விருது
•ஆத்மாராம் விருது
•சுப்ரமண்யம் பாரதி விருது
•முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது 
•பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது

படைத்துறை :

(போர்க்காலம்)

•பரம் வீர் சக்கரம்
• மகா வீர் சக்கரம்
•வீர் சக்கரம்

(அமைதிக்காலம்)

•அசோகச் சக்கரம்
•கீர்த்தி சக்கரம்
•செளர்யா சக்கரம்

போர்க்காலம்/அமைதிக்காலம்
பணி & வீரதீரம்:

•சேனா பதக்கம்
(தரைப்படை)

• நவ சேனா பதக்கம்
(கடற்படை)

• வாயுசேனா பதக்கம்
(வான்படை)

சிறப்புமிகு போர்க்காலப்
பணி

•சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்
•உத்தம் சேவா பதக்கம்
•யுத் சேவா பதக்கம்

சிறப்புமிகு
அமைதிக்காலப்
பணி

•பரம் விசிட்ட சேவா பதக்கம்
•அதி விசிட்ட சேவா பதக்கம்
•விசிட்ட சேவா பதக்கம்