நாம் அன்றாடம் பல வகையான பொருட்களை வாங்கி உபயோகிக்கிறோம். மின் சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள்,செல்போன், மெமரிகார்ட்,பென்டிரைவ், உடுத்தும் துணி வரை ஏராளமான பொருட்களை நாம் கடைக்குச் சென்று வாங்குகிறோம்.அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகவோ (அ) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவையாகவோ இருக்கலாம். பேக் (PACK) செய்யப்பட்ட அப்பொருள்களின் அட்டைப்பெட்டி அல்லது டப்பாக்களின் (TIN) மீது பல்வேறு குறியீடுகள் (SYMBOL or SIGN) இருப்பதை பார்த்திருப்போம். அக்குறியீடுகள் எதைக்குறிக்கின்றன.அவை அப்பொருளின் தரம், உபயோகமுறை, உபயோகித்த பின் அப்பொருளை என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விளக்கங்களையே குறிக்கிறது. இத்தகைய குறியீடுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
இவை யாரால் ஏன் தரப்படுகிறது?
ஒரு பொருளை உற்பத்தி
செய்பவர் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும்
பொருட்கள் தரமானதுதானா
என்பதை நுகர்வாளருக்கு எப்படி தெரிவிப்பது? அப்பொருளைப் பற்றி
அவர் விளம்பரம் செய்யலாம்
ஆனால் விளம்பரத்தின் மூலம்
இவர் சொல்வதை
நுகர்வாளர் நம்பலாம் அல்லது நம்பாமலும் போகலாம்.எனவே உற்பத்தியாளருக்கும்
நுகர்வோருக்கும்
இடையில் ஒரு நபர் தேவைபடுகிறார் .அவர்தான் இந்த சான்றிதழ்
(குறியீடு) வழங்கும்
நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனங்கள்
வழங்கும் சான்றிதழ்களே நமக்கு குறியீடுகள்
(SIGN & SYMBOL)
மூலம் உணர்த்தப்படுகின்றது.
அவை முக்கியமாக •தயாரிப்பு தரம்• ( Product Quality ) •தர நிர்வாக முறை• (Quality Management System) •சுற்றுசூழல் மேலாண்மை. Environment Management •பாதுகாப்பு முறை• (Safety System ) போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
அவற்றில் ஒரு சிலவற்றை இப்போது காண்போம்.
ஒவ்வொரு நாடும் தரநிர்ணய முறைக்கு தங்களுக்கென தனித்தனி கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக இந்தியா "இந்திய தர நிர்ணய ஆணையம் " (BUREAU OF INDIAN STANDARDS) என்ற அமைப்பின் மூலம் சான்றிதழ்கள் வழங்குகிறது. அவைகளை முதலில் பார்ப்போம். இந்தியாவில் வழங்கப்படும் தரச்சான்று மற்றும் அதன் குறியீடுகள்
1. ISI
இந்திய தரக்கட்டுப்பாட்டு மையம்
(INDIAN STANDARD INSTITUTE )
தொழிலக உற்பத்திப் பொருட்கள்
(Industrial Products )
2. BIS HALLMARK
தங்கம் மற்றும் வெள்ளி
(GOLD and SILVER )
3.FSSAI
பாதுகாப்பான உணவுப்பொருள்
(Food Safety and Standards Authority of India)
4.AGMARK
அனைத்து விவசாய பொருட்கள்
(Agricultural Products)
5.SILK MARK
தூய பட்டு (PURE OF SILK)
6.INDIA ORGANIC
ஆர்கானிக் (உயிர்ம) பொருட்கள்
(Non Chemical)
7.FPO
பழரசப் பொருட்கள்
(Food Processed Order)
8.NON POLLUTING VEHICLE
மாசுக் கட்டுப்பாடுடைய வாகனம்
9.ECO MARK
சுற்றுச் சூழலியல. மேலும்,
•AYUSH MARK
இயற்கை நல மருந்துகள்(Herbal Products)
•TOXICITY MARKS
நச்சுத் தன்மையுடைய பொருள்
என பல தரச்சான்றுகளை
வழங்குகிறது.
இவ்வமைப்பின்
மூலம் வழங்கப்படும் முத்திரையானது (SIGN)
நுகர்வோர்களுக்கான
இந்தியப் பொருட்களின்
தர உத்திரவாதத்தை
வழங்குகிறது.
உலக நாடுகள், NATIONAL INSTRUMENTS (NI) எனப்படும் மின் (Electrical), மின்னணு (Electronic), மின் காந்ந (Electromagnetic) மற்றும் வெடிக்கும் (Explosives) தன்மையுடைய பொருட்களுக்கான தர உத்திரவாதங்கள் (Certificate) பல அடிப்படைகளில் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில :
EMC
(ElectroMagnetic
Compatibility )
மின்காந்த ஒத்திசைவு
EMI
(Electromagnetic
Interference )
மின்காந்த குறுக்கீடு
QMS/EMS
(Quality/Environmental
Management Systems)
தரம் மற்றும் சுற்றுச்சூழல்
மேலாண்மை
போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அவற்றை வழங்கும்
நாடுகளும் அதன்
குறியீடுகளையும் (Sign)
பார்ப்போம் பின்வரும்
படத்தைப் பாருங்கள்
(இவை நமது நாட்டின் ISI முத்திரை போன்றது) FCC: அமெரிக்கா FEDERAL COMMUNICATION COMMISSION (American EMI) CE: ஐரோப்பா EUROPEAN CONFORMITY (European Union EMC and Safety) RoHS: ஐரோப்பா (Restriction Of the use of certain Hazardous Substances)
கீழே உள்ள
படத்தைப் பார்க்கலாம்
VCCI: ஜப்பான் (Voluntary Control Council of Interference) CSA: கனடா (Canadian Standards Association) EX: ஐரோப்பா EXPLOSIVES (European Union Hazards Location) NATA: ஆஸ்திரேலியா (National Association of interference Testing Authority) ! or ESUI : பொது (Global Sign) தகவல் (அ) குறிப்புகள் (Essential Safety & Usage Information) IC(or)CANADA : கனடா (Canada Industries)
UL: அமெரிக்கா
(Underwriters Laboratory)
North American Hazardous
Locations and Product (Safety)
GS : ஜெர்மன்
German Safety
Rounded (e) and
Number: சீனா
China RoHS
(Restriction Of
the use of certain
Hazardous Substances) (இதில் உள்ள எண்கள்
வருடத்தை குறிக்கும்)
Number Stands In Year
KCC: கொரியா
(Korea Communications Commissions)
CCC :சீனா
China Compulsory Certificate
(Safety)
RCM/C-Tick:ஆஸ்திரேலியா
Australian/New Zealand
EMC (Electronic Products)
PSE :ஜப்பான்
(Product Safety Electrical Appliances)
Demko (or) VDE :
ஐரோப்பா-ஜெர்மனி
(Verband Duetscher Elektrotechniker)
European Union Product
Safety Certification
A-Tick :ஆஸ்திரேலியா
Australian/New Zealand EMC
(Communication Products)
ISO 9001:சர்வதேச அமைப்பு
INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION.
சர்வதேச தர நிர்வாக முறைமைக்கான சான்றிதழ்.
தரமான உற்பத்தி முதல்
விற்பனைக்குப்பின் சேவை
வரை இதில் அடங்கும்
ISO14001 :சர்வதேச அமைப்பு
INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION.
சர்வதேச சுற்றுச் சூழல்
முறைமைக்கான சான்றிதழ்
IEC : சர்வதேச
ஆய்வக அமைப்பு
(INTERNATIONAL ELECTROMAGNETIC COMPLIANCE)
ஆய்வக அங்கீகாரம்
பொது : IEC
ஐரோப்பா : EN
அமெரிக்கா : UL
கனடா : CSA
WEEE:குப்பைத் தொட்டியில்
பெருக்கல் குறியிடப்பட்டது
(Waste Electrical and Electronics Equipment )
கழிவு விதிமுறையை பின்பற்ற
அறிவுறுத்துகிறது.
இன்னும் சிலவற்றைப்
பார்ப்போம்.
கடல் வழி செல்லும்
பொருள்களுக்கான தர
உத்திரவாதம்
DNV,RINA,LR,VERITAS போன்றவை. (Marine Approval இவை வெவ்வேறு நாடுகளின்
குறியீடுகளாகும்)
ரேடியோ அலைவரிசை
தகவல் தொடர்பு அலைவரிசை
போன்றவைகளினால் ஏற்படும்
பாதிப்பு குறித்த தகவல் (எழுத்து)
குறியீடுகள்:
ERM :
Electromagnetic
compatibility and Radio
spectrum Matters
SRD :
Short Range Devices
(இதை அதிகமாக செல்போன்களில் காணலாம் )
Thursday, March 6, 2014
நுகர்வோர் விழிப்புணர்வு: நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டியவை PACKAGING மற்றும் LABEL
நுகர்வோர் விழிப்புணர்வு
என்பது தாம் பயன்படுத்தும்
பொருட்கள் மற்றும்
சேவைகள் குறித்துத்
தங்களுடைய
உரிமைகளை ’நுகர்வோர்
அறிந்திருத்தல்’ ஆகும்.
நுகர்வோர் விழிப்புணர்வை
வலியுறுத்தி
ஆண்டு தோறும் இந்தியாவில்
டிசம்பர் 24 ஆம்
தேதி தேதி நுகர்வோர் தினம்
( National Consumer Day,
December 24 )ஆக
அனுசரிக்கப்படுகிறது.
மக்களுக்கு விற்பனை
செய்யப்படும் உணவுப்
பொருட்கள்
பாதுகாப்பானதாகவும்,
போதிய ஊட்டச்சத்துக்கள்
அடங்கியதாகவும் உணவுப்
பொருட்களுக்கு அறிவியல்
அடிப்படையிலான
தரநிர்ணயங்களை
உருவாக்குவதற்காகவும்,
அவற்றின் தயாரிப்பு,
சேமிப்பு, விநியோகம்,
விற்பனை,
இறக்குமதி ஆகியவற்றை
ஒழுங்குபடுத்துவதற்காகவும்
இந்த அமைப்பு,
உருவாக்கப்பட்டுள்ளது.
உணவு பொருள்
விற்பனையில்
பேக்கேஜிங் ,
(PACKAGING)
லேபில் (LABEL)
இடுதல் இரண்டும்
முக்கிய பங்கு வகிக்கின்றன .
உணவுப்
பொருள்களை தயாரித்த
பின்பு,
உடனே அல்லது பல
நாட்களுக்குப்பின்
உள்ளூரில்(அ)
வெளியூரில் (அ )
வெளி நாட்டில் பல
மைல்களுக்கு அப்பால்
விற்பனையாகும்
வரை அது கெட்டுப்
போகாமல் , காற்றுப்
புகாதவாறு ,
ஒழுகாதவாறு அதன் மணம்
கெடாதவாறு,
நுகர்வோரை சென்றடையச்
செய்யும்
முறைக்கு பேக்கேஜிங்
(PACKAGING)
என்று பெயர்.
இதில் மொத்தமாக பேக்
செய்வது, பல சிறிய
பொட்டலங்களாக
(POCKET)
ஒன்று கூட்டி பேக
(PACK)்
செய்வது என்று பல
வகைகள் உண்டு.
கண்ணாடி,
டின், அட்டைப்பெட்டி,
பேப்பர், பாலிதீன் பைகள்,
துணிப்பைகள்,
சாக்கு மூட்டைகள்,
என்று பேக்கேஜிங் பல
வண்ணங்களில், பல
வடிவங்களில், பல
அளவுகளில் சீல் செய்து,
மூடி இட்டு, தைத்து,
விற்பனைக்கு வரும்.
லேபிள் (LABEL):
இந்த பேக்கேஜ்கள் மேல்
ஒட்டப்பட்டிருக்கும்,
பிரிண்ட்
செய்யப்பட்டிருக்கும்,
மூடியில்
எழுதப்பட்டிருக்கும்
அனைத்து விபரங்களும்,
வாசகங்களும்,
எழுத்துக்களும்
வரிவடிவங்களும்,
முத்திரைகளும் 'லேபிள்'
(LABEL)
எனப்படும்.
இந்த லேபில்கள்
ஹிந்தி அல்லது
ஆங்கிலத்தில்
இருக்கலாம். இதர பிற
மொழிகளில் கூடுதலாக
இருக்கலாம். இதன்
வடிவங்கள், நிறம்,
எழுத்துக்களின் அளவு,
உயரம் அகலம், எல்லாம்
எவ்வளவு இருக்க
வேண்டும் என்று
தெளிவாக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும்
தெளிவாக, குழப்பமின்றி,
நுகர்வோரைத்
திசை திருப்பா வண்ணம்,
ஏமாற்றாதவாறும்
கண்ணுக்குப் புலப்படும்
வகையிலும் இருத்தல்
அவசியம்.
இவைகளில் ஏதேனும்
குறை, வேறுபாடு,
தெளிவற்று இருந்தால்
அது "தவறான குறியீடு"
இட்டது (Misbranded)
என்று கருதப்பட்டு
தண்டனைக்குரிய
குற்றமாகும்.
உணவு பொட்டலமாக்க
என்ன அடிப்படை
பேக்கேஜிங் (packaging)
பின்பற்றப்பட
வேண்டும் ?
துருப்பிடித்த, உடைந்த
எனாமல், ஈயம்
பூசப்படாத பித்தளை ISI
தரமில்லாத அலுமினியம்
பாத்திரங்களை உணவு
உபயோகத்திற்குப்
பயன்படுத்தக்கூடாது.
பாலிஎதிலின், ஸ்டைரீன்
பாலிமர், பி.வி.சி,
பாலிபுரோபிலீன், பெட்,
EAA, EVA, EMAA ஆகிய
பிளாஸ்டிக் பொருட்கள்
ISI தரத்திற்கு
உட்பட்டவையாக
இருந்தால்
மட்டுமே உணவுப்
பயன்பாட்டிற்கு
உரியதாகும்.
உஷ்ணப்படுத்தப்பட்ட
பால்
/ பால் பொருட்கள்
தானியங்கி முறையில்
பேக்
செய்யப்படவேண்டும்.
கண்ணாடிபாட்டில்
போன்ற மீண்டும்
பயன்படுத்தக்கூடியவை
தவிர பிற பேக்கிங்
சாதனங்களை மீண்டும்
உபயோகிக்க கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட
உடன் உரிய வெப்ப
நிலையில் சேமிக்க
வேண்டும் .
எண்ணெய் பேக் செய்ய
பயன்படுத்தப்படும் டின்
பிளேட்டுகள் ISI
தரமுடையதாக இருக்க
வேண்டும்.
கேன்ட் (CANNED),
பாட்டில்டு (BOTTLE)
ப்ளக்சிபிள் பவுச்
(FLEXIBLE POUCH)
ஆகியவற்றில்
பழங்கள், காய்கறிப்
பொருட்களை பேக்
செய்ய வேண்டிய
விபரங்கள்
BIS முறைப்படி இருத்தல்
வேண்டும்.
கேன்ட்(CANNED)
இறைச்சி பொருட்கள்
லேக்கர்
செய்யப்பட்டு கேன்களில்
பேக் செய்யப்பட
வேண்டும்.
PDW / Mineral Water
பாட்டிலில்
அடைக்கப்பட்ட தண்ணீர்
ISI தரப்படி இருத்தல்
அவசியம்.
லேபிளில் இருக்க
வேண்டியவை:-
உணவுப் பொருளின்
பெயர், வியாபாரப் பெயர்.
அடங்கியுள்ள
பொருட்கள் .
தயாரிப்பாளரின் பெயர்
மற்றும் முழு முகவரி
இறக்குமதி செய்யப்பட்ட
உணவுக்கு
இறக்குமதியாளர்களின்
முகவரி
நிகர அளவு / எடை /
எண்ணிக்கை.
பேட்ச் / லாட் / கோட்
எண்.
பேக்செய்யப்பட்ட /
தயாரித்த நாள் / மாதம்,
வருடம் .
சிறந்த பயன்பாட்டு நாள் /
இறுதி உபயோக நாள் .
அடங்கியுள்ள
சத்துக்களின் அளவு /
100gm / 100 ml
சைவ உணவுக்
குறியீடு (பச்சை).
அசைவ உணவுக்
குறியீடு (பழுப்பு).
உணவுச் சேர்க்கைகள்
சேர்க்கப்பட்ட
வண்ணங்கள், நறுமணம்.
இறக்குமதி செய்த
உணவு தயாரான
நாட்டின் பெயர் .
உபயோகிக்கும்
முறை (விருப்பப்படி).
பாதுகாக்கும்
முறை Storage
Condition-(விருப்பப்படி).
வனஸ்பதி /
பேக்கரி சார்ட்டனிங்
பயன்படுத்தி இருந்தால்
TFA
உள்ளது என்று குறிப்பிட
வேண்டும்.
ஹெல்த் க்ளெய்ம் -
Health Claim
(விருப்பப்படி)
நீயுட்ரீஷன் க்ளெய்ம் -
Nutrition Claim
(கட்டாயம்)
இவைதவிர "சட்ட
அளவியல் முறை" (Legal
Metrology)
லேபிள்கள் பிரிண்ட் செய்யும்
முறை:
லேபிள்களில்
வெளியிடப்படும் வாசகங்கள்
தெளிவாக, கண்ணுக்குப்
புலப்படும் வகையில்,
திசை திருப்பாமல்,
எளிமையாக இருக்க
வேண்டும்.
லேபிளில் மிக முக்கிய
பகுதி எனப்படுவது
Principal Display Panel
என்பதாகும்.
லேபிள்களில் பிரிண்ட்
ஆகும் எண்கள் /
எழுத்துக்களின் உயரம்
இதர அளவுகள்
உரிய அளவில்
இருக்க வேண்டும்.
குழந்தைகள் உணவு
(Infant Food).
(12 மாதத்திற்குட்பட்ட
குழந்தைகள் உணவு)
டின்களில் இருக்க
வேண்டிய குறிப்புகள்,
எச்சரிக்கைகள்,
அளவுகள், வாசகங்கள்
பற்றிய விளக்கம்
இருக்கவேண்டும்.
எண்ணெய் /
கொழுப்பு பாக்கெட்களில்
"கொலஸ்டிரால் எதிர்ப்பு"
டபுள் ரீ பைன்ட் போன்ற
வாசகங்கள்
இருக்கக்கூடாது.
உணவுக் கொழுப்பு / எண்ணெய்
பாக்கெட்களில் "ஆர்ஜிமோன்
எண்ணெய் கலப்படம் இல்லை"
என்ற வாசகம் இருக்க
வேண்டும்.
"ரீபைண்ட் (உணவு எண்ணெய்)
எண்ணெய்" பாக்கெட்டுகளில்.
குறிப்பிட்ட தாவர
எண்ணெயின் பெயர் இருக்க
வேண்டும்.
இரண்டு எண்ணெய்கள்
"அக்மார்க்"
அனுமதியுடன்
கலந்து பேக்
செய்யப்பட்டால்
எண்ணெய்களின்
அளவு மற்றும் பெயர்
குறிப்பிட்ட
”Blended Oil” என்று கூற
வேண்டும்.
உணவு வண்ணங்கள்;
சேர்க்கப்பட்ட
உணவு பாக்கெட்களில்
"அனுமதிக்கப்பட்ட நிறம்
மட்டும்
சேர்க்கப்பட்டுள்ளது" என
குறிப்பிட வேண்டும்.
செறிவூட்டப்பட்ட பால்
ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட
உணவுச் சத்து சேர்க்கைகள்
குறிப்பிட வேண்டும்.
பட்டைகளில் காசியா /
சின்னமன்
என்று குறிப்பிட்டு
விற்கவேண்டும்.
செறிவூட்டப்பட்ட பால்,
கொழுப்பு நீக்கிய பால்,
நிலைப்படுத்தப்பட்ட பால்
ஆகியவை அதன் பெயர்
குறிப்பிட்டு விற்க
வேண்டும்.
செயற்கை இனிப்பூட்டிகள்
சேர்க்கப்பட்டால் அதன்
பெயர் /
குழந்தைகளுக்கு ஏற்றதல்ல /
for calorie conscious
என்று குறிப்பிட வேண்டும்.
பான்மசாலா பாக்கெட் &
விளம்பரங்களில்
சுப்பாரி (பாக்கு)
சுவைப்பது உடல்
நலத்துக்கு கேடு என்று
குறிப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம் / Dessert
ஆகியவற்றில் பால்
கொழுப்பு / உணவு எண்ணெய் /
தாவரக்
கொழுப்பு அடங்கியது என்று
குறிப்பிட வேண்டும்.
உப்பு பாக்கெட்களில்
அயோடின் கலப்பதற்கு /
இரும்பு சத்து கலப்பதற்கு /
மிருக உபயோகத்திற்கு /
மருந்துக்கு /
preservative
க்கு என்று அதன்
பயன்பாட்டிற்கு.
உணவு சத்துக்கள்
சேர்க்கப்பட்ட உணவுகளின்
மேல்
செறிவூட்டப்பட்டது என்று
குறிப்பிட வேண்டும்.
லேபில்களின் மேல் உணவுச்
சட்டம் விதிகள் பற்றிய
குறிப்புகள்
இருக்கக்கூடாது.
மருத்துவர்களால்
பரிந்துரைக்கப்பட்டது
என்று குறிப்பிடக்கூடாது.
குடிதண்ணீர் பாட்டில்களின்
மேல் மருத்துவ குணம்
கொண்டது என்றோ,
குறிப்பிட்ட ஊர்,
இடத்தை குறிக்கும்
வாசகங்களோ, படங்களோ,
இருக்கக் கூடாது.
என்ன தகவல் லேபிளில் காட்டப்பட
வேண்டும் ? ஏன்?
சிறந்த பயன்பாட்டு காலம்
சேமிப்பு விதிமுறைகளின்
கண்டிஷன்களின்
படி பாதுகாக்கப்பட்டால்
உண்ண உபயோகிக்கத்
தகுந்த நாள் / மாதத்தைக்
குறிக்க
வேண்டும்.
லாட் எண் /
கோட் எண் /
பேட்ச் எண் -
என்பவை
உணவு தயாரிப்பு மற்றும்
விற்பனையில் உணவுப்
பொருளை அடையாளம்
காணப் பயன்படும்
குறியீடுகளாகும்.
அசைவ உணவு:-
மிருகம்,
பறவை, மீன், முட்டை
ஆகியவை
பகுதியாகவோ
முழுமையாகவோ அடங்கியது.
இதில் பால் மற்றும் பால்
பொருட்கள் அடங்காது.
சைவ உணவு :-
அசைவ உணவில்
அடங்காதவை அனைத்தும் சைவ
உணவு ஆகும்.
“இறுதி உபயோக நாள்"
(Expiry Date )
என்பது இந்த நாளுக்குப்
பின் விற்கக்கூடாது
என்பதை குறிக்கும்.
இது இந்தியாவில்
கடைபிடிக்கப்படும்
முறையாகும்.
சர்வதேச அளவில்
ஒவ்வொரு நாடுகளும்
பல்வேறு பொருட்களுக்கு
பல்வேறு குறியீடுகளை
வைத்துள்ளன.
லேபிளில் இடப்படும்
குறியீடுகள் (Sign)
என்பது மறுசுழற்சி(Recycle),
பாதுகாப்பு(Safety),
தரம் (Quality)
மற்றும்
உபயோகமுறை(Usage)
போன்றவைகளை குறிப்பதாகும்
இக்குறியீடுகள்(Sign)
ஆயிரக்கணக்கில் உள்ளன.
அவற்றில் ஒரு சிலவற்றை
அடுத்த பதிவில் பார்ப்போம்
Subscribe to:
Posts (Atom)