Showing posts with label பராமரிப்பு. Show all posts
Showing posts with label பராமரிப்பு. Show all posts

Friday, July 26, 2013

உங்கள் செல்போனின் வாழ்நாள் உங்கள் கையில்

குறைந்த விலை மொபைல்போன், காஸ்ட்லியான மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே
அதன் ஆயுட்காலம் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்தில்
இழந்துவிடும். சில
எளிய முறைகளை கையாண்டால் 
உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த
முடியும்.
உங்களுக்காக
சில எளிய
வழிமுறைகள்...

மொபைல்போன்கள் தட்பவெப்பத்தால்
அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிக குளிர்ச்சியான மற்றும் அதிக வெப்பமான
இடங்களில் மொபைல்போனை
தொடர்ந்து
வைத்திருக்க
வேண்டாம். தவிர
மழைச்சாரல்
அடிக்கும் ஜன்னல் ஓரங்களிலும்
வைக்க வேண்டாம். இதனால், போனின் ஹார்டுவேர்கள்
எளிதாக பாதிக்கும் அபாயம் உள்ளது.


சிலர் போன்
தண்ணீரில் விழுந்த
உடன் அவசர
அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன்
செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில்
இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும்.
பின்னர் துணி
அல்லது டிஸ்யூ
பேப்பர் கொண்டு
வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில்
உங்கள் போனை
வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால்
இதற்கு பொறுமை
மிக அவசியம்.
(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி
கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம்.
Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
அப்போது
போன் அதிகம்
சூடாகக் கூடாது.
போன் நன்றாக
காய்ந்த பின்
அதில் நீர் இல்லை
என்று உறுதி செய்து கொண்ட பின் அதை
ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு
பேட்டரி இருந்தால்
அதை போட்டு
முயற்சி செய்யவும். அப்போது ஆன்
ஆகினால் போன்
ஓகே.
பேட்டரியில் பிரச்சினை இருக்கும்.
வேறு பேட்டரியிலும்
ஆனாகவில்லை
என்றால்
கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

போன் சார்ஜில் இருக்கும்போது
போனில் பேசுவதை
தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
மின் இணைப்பை துண்டித்து
விட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது.

பேட்டரியில் சார்ஜ் முழுவதும் தீர்ந்தபின் மீண்டும் சார்ஜ் செய்யுங்கள்.
அடிக்கடி சார்ஜ் செய்வதால் உங்கள் பேட்டரியின் ஆயுள் சீக்கிரத்தில்
போய்விடும்.
மேலும், சிறிது காலத்தில் பேட்டரி
தனது சேமிப்பு
திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும்
தேவை இல்லாத
போது புளூடூத் ,
ஸ்கிரீன் 
டிஸ்பிளே டைம்,
கீ பேட் டோன்
போன்றவைகளை
நிறுத்தி
விடுங்கள்
அவை சார்ஜ்
இறங்க  
காரணமானவை.

வங்கி ரகசிய எண்கள் உள்ளிட்ட அதிமுக்கியமான தகவல்களை
மெமரி கார்டில்
பதிவு செய்ய
வேண்டாம். சில சமயங்களில் போன் தொலைந்து
போனால், அதன்
மெமரி
கார்டில் உள்ள தகவல்களை
அடுத்தவர் எளிதில் எடுத்து துஷ்பிரயோகம் செய்யக்கூடும்
என்பதை மனதில் கொள்ளுங்கள்

டிஸ்பிளேயின்
பிரகாசத்தை
குறைத்து
வையுங்கள். இதன்மூலம், பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம்
காலியாகாது. போன் பேசுவதைவிட எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை பரிமாறினால்
கூட பேட்டரியில்
சார்ஜ் சீக்கிரம்
இறங்காது. இதேபோன்று, மற்றொன்று
முக்கிய விஷயம், தேவையில்லாமல் வைபரேட்டர்
மோடை ஆன்
செய்ய
வேண்டாம்.
வைபரேட்டர் மோடு பேட்டரி சார்ஜை வேகமாக
உறிஞ்சிவிடும்

பேட்டரி பழுதாகி
விட்டால், போலி தயாரிப்புகளை
வாங்காமல்
விலை 
கூடுதலாக
இருந்தாலும், 
தரமான மற்றும்
அந்தந்த 
நிறுவனத்தின்
ஒரிஜினல்
பேட்டரிகளை வாங்குங்கள்.

சாதாரண மொபைல்
போன்களைவிட
டச் ஸ்கிரீன்
போன்களை
பராமரிப்பது சற்று கடினமான விஷயம்.
டச்
ஸ்கிரீன் போன் வாங்கும்போதே
அதற்கு மேல்
தகுந்த உறையை லேமினேஷன் செய்துகொள்ள வேண்டும்.

டச் ஸ்கிரீன் டிஸ்பிளேயில்
விரலால் மெதுவாக
தொட்டு
அப்ளிகேஷன்களை
இயக்க பழகுங்கள். நகங்களை கொண்டு சிலர் இயக்குவதை
கண்டிருக்கிறோம்.
அது நாளைடைவில் டிஸ்பிளேயில் குறிப்பிட்ட
இடங்களில்
கீரல்களை
உண்டாக்கிவிடும்

போனின் கீபேடு
லாக்கை ஆக்டிவேட் செய்து
வைத்துக்கொள்வது
சிறந்த வழி.
மேலும், தினமும் போனை மெல்லிய துணியால் சுத்தம் செய்வது நல்லது

உராய்வுகளால்
போனின் டிஸ்பிளே மற்றும் இதர
முனைகள்
பாதிக்கப்படும். பிளாஸ்டிக் மற்றும் லெதர் உறைகளில் போனை பாதுகாப்பாக வைத்திருக்க
பழகுங்கள்

குழந்தைகளிடம்
போனை கண்டிப்பாக
கொடுக்கக் கூடாது.
தவறான பயன்பாடு,
தவறி விழுதல்
போன்றவைகளால்
போனின் வாழ்நாள்
குறைய வாய்ப்பு
உண்டு.