Showing posts with label PF balance. Show all posts
Showing posts with label PF balance. Show all posts

Monday, October 13, 2014

வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் பதிவு செய்வது எப்படி? உங்கள் UAN நம்பரை பதிவு செய்துவிட்டீர்களா?

வருங்கால வைப்பு நிதி (PROVIDENT FUND) கணக்கு விவரத்தை அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள வருங்கால வைப்பு நிதி தலைமை அலுவலகம் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumber) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கு விவரத்தை தெரிந்து கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய வருங்கால வைப்பு நிதி (P.F) கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது UAN நம்பரை பதிவு செய்து கொள்வதாகும். (இந்த UAN நம்பரை நீங்கள் வேலை செய்யும்  நிறுவனத்தில் வாங்கவேண்டும்)
அதற்கான வழிமுறைகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வழி 1.
http://uanmembers.epfoservices. in/என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.
2. I Have Read and Understood the Instructions . என்று இருக்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.
3.அதன் பின் அதனை ஆக்டிவேட் செய்வதற்கான பதிவு செய்தலில் உங்கள் விவரங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனம் அளிக்கும் (UAN) 12 இலக்க எண்ணையும், உங்கள் செல்போன் நம்பரையும் உங்கள் மாநிலம், அலுவலகம் மற்றும் 17 இலக்க பழைய வருங்கால வைப்பு நிதி எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும். பின்பு கீழே உள்ள  பாக்ஸில் இருக்கும் எழுத்துக்களை அருகில்  உள்ள வெற்று பாக்ஸில் கொடுத்து  GETPIN கொடுக்கவும். இப்போது உங்கள் செல்போனிற்கு நான்கு  இலக்க PIN (One Time Password- OTP) அனுப்பப்படும். 
4.மேலும் கீழிறங்கி I Agree  என்ற இடத்தில்  இருக்கும் பாக்ஸில் டிக் செய்ய  வேண்டும். பின்பு செல்போனிற்கு வந்த PIN ஐ (OTP)யை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.
5.பின்னர் உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.(பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு முன் மேலே உள்ள பாக்ஸில் டிக் செய்யவும்)
6.UAN Login செய்து ''டவுன்லோடு'' என்ற இடத்தில் கிளிக் செய்தால் டவுன்லோட் பாஸ்புக் என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தால் இந்த மாதம் வரை உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடித்த பி.எஃப் தொகை மொத்தமாக எவ்வளவு உள்ளது. அதில் உங்களது பங்கு என்ன? உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன என்பது தெரிந்துவிடும்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது