Showing posts with label அளவுகள். Show all posts
Showing posts with label அளவுகள். Show all posts

Friday, December 13, 2013

இந்திய தேசியக் கொடி


நாம் நம் தேசியக்கொடியின் அளவுகள் குறித்த விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள் தேசியக்கொடியினை தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும்போதும் அரசும், அரசு நிறுவனங்களும் பயன்படுத்தும்போதும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிகள்.
் * தேசியக்கொடி செவ்வக வடிவில், நீள அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேல்புறம் காவி வண்ணம், நடுவில் வெண்மை, கீழ்ப்புறம் பச்சை, நடுவில் உள்ள வெண்மையின் நடுவில் நீலநிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் என்ற வடிவத்தில் இருக்க வேண்டும்.
* தேசியக்கொடி, கம்பளி, கதர் மற்றும் பட்டுத் துணிகளில் கையினால் நெய்யப்பட்டதாகவே இருக்கவேண்டும்.
* செவ்வக வடிவில் 3:2 என நீள அகலம் எனப் பொதுவில் இல்லாது கீழ்க்கண்ட அளவுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
* 6300 x 4200, 3600 x 2400, 2700 x 1800,1350 x 900, 900x 600, 450 x 300, 225 x 150, 150 x 100 (அளவுகள் மில்லி மீட்டரில்.)
* தனிமனிதர், தனியார் நிறுவனங்கள் தேசியக்கொடியினை, தேசியச் சின்னங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அதற்குரிய மரியாதையுடனும் மதிப்புடனும் பயன்படுத்த தடையில்லை. இதன்படி, தேசியக்கொடியினை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாகாது. பிறருக்கு மரியாதை செய்யும்போது தேசியக்கொடியினைத் தாழ்த்திப் பிடித்து வணக்கம் சொல்லுதல் கூடாது.
* பொது இடத்தில் தேசியக்கொடியினைக் கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்
* எந்த ஒரு பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாக தேசியக்கொடியினைப் பயன்படுத்தலாகாது. (அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் மறைந்தவரின் உடலை, ராணுவ வீரர் இறந்தால் அவரது உடலை தேசியக்கொடி கொண்டு போர்த்துதல் இதில் அடங்காது.)
* தேசியக்கொடியை, அணியும் உடை, பயன்படுத்தும் கைத் துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது.
* தேசியக்கொடி மண்ணில்/ தரையில்/தண்ணீரில் படுபடியாக விடக்கூடாது.
* தனியார் கல்வி நிலையங்களில், நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் போது, கிழிந்த, சேதமான நிலையில் இருக்கும் கொடி பயன்படுத்தலாகாது; மிகவும் பிரதானமான இடத்தில் கொடி ஏற்றப்பட வேண்டும்; தேசியக்கொடியுடன் பிற கொடிகள் ஏற்றப்படலாகாது. தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பம் மற்றும் அதன் பீடத்தின் மீது மாலைகளோ அல்லது வேறு பொருட்களோ வைக்கலாகாது.
* தேசியக்கொடியினை காகிதத்தில் செய்து, விருந்தினர் வருகையின்போது மரியாதை நிமித்தம் அசைத்து வரவேற்பு நல்கலாம்.
* சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும். அது போல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கி வைக்கப்படவேண்டும்.
* கல்வி நிறுவனங்களில், தேசியக்கொடி முக்கிய தினங்களில் ஏற்றப்படும்போது, கூடிநிற்பவர் கொடிக்கு எதிர்ப்புறம் ஒரே பக்கத்தில் இருக்கவேண்டும். கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பத்தினை சூழ்ந்து நிற்கலாகாது.
* அரசு கட்டடங்களில் பிறநாட்டுக் கொடி அல்லது ஐ.நாவின் கொடியுடன் நமது தேசியக்கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்களில், கட்டடத்தின் எதிரே நின்று கட்டடத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கட்டடத்தின் இடதுமூலையில் கொடி வருமாறு ஏற்ற வேண்டும்.
* பலநாட்டுக் கொடிகள் ஏற்றப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் (உதாரணமாகப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம்) கட்டடத்தில், நமது தேசியக்கொடியே முதலில் ஏற்றப்பட்டு, கடைசியில் இறக்கப்பட வேண்டும். பிறநாட்டு ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்து அகரவரிசைப்படி கொடிகளின் வரிசை அமைய வேண்டும்.
* அரசு விருந்தினராக இந்தியாவில் பயணிக்கும் வெளிநாட்டுப் பிரமுகரின் காரில், வலப்புறம் நம் தேசியக்கொடியும், இடப்புறம் அவரது நாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட வேண்டும்.
* தலைவர்கள் மறைவின்போது, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் இவர்களது மறைவின்போது நாடெங்கும்; லோக்சபா சபா நாயகர், உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி இவர்கள் மறைந்தால் டெல்லி நகரிலும்; மத்திய அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரம் மற்றும் அவர் சார்ந்த மாநிலத் தலைநகரிலும்; மத்திய அரசின் இணை அமைச்சர்/ துணை அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரிலும்; மாநில அரசின் அல்லது யூனியன் பிரதேச கவர்னர் / முதலமைச்சர் / மறைந்தால் அந்த மாநில யூனியன் பிரதேசம் முழுவதும்; மாநில / யூனியன் பிரதேச அமைச்சர் மறைந்தால் அந்த மாநில / யூனியன் பிரதேச தலை நகரத்திலும் அரைக் கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும்.
* ஆயினும் தலைவர்கள் மறைவு, அடக்கம், எரியூட்டும் தினம் இவை, குடியரசு தினமான ஜனவரி 26, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, தேசப்பிதா காந்தியாரின் பிறந்த தினமான அக்டோபர் 2, தேசிய் வாரமான ஏப்ரல் 6 முதல் 13 வரை (ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை போற்றும் விதமான தேசிய வாரம் இது), மாநில உதயம் கண்ட நாட்கள் போன்றவற்றில் ஏற்பட்டால், தலைவரின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் மட்டுமே தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். அதுவும் அந்த நாளில் அவரது உடல் தகனத்திற்காக / அடக்கத்திற்காக அந்தக் கட்டடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டபின் மீண்டும் தேசியக்கொடி முழுக்கம்பத்திற்கு உயர்த்தப்படவேண்டும்.
* காலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பு தலைவர்களின் மரணச் செய்தி கிடைக்கப்பெற்றால், உடன் தேசியக்கொடி அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட வேண்டும். அன்றைக்கு மாலை அடக்கம் / தகனம் நடைபெறாது இருப்பின் மறுநாளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவேண்டும். மறுநாள் பறக்கவிடப்படும் போது, தேசியத் துக்கம் பின்பற்றப்படும் என தொடர்புடைய அரசு அறிவிக்கும் நிலையில், அந்த நாட்களில், கொடி முழுக்கம்பத்துக்கு ஏற்றப்பட்டு பின்னர் அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட வேண்டும். அன்று மாலை கொடி இறக்கப்படும்போது அரைக்கம்ப நிலையிலிருந்து இறக்கப்படலாகாது; அரைகம்ப நிலையில் இருந்து, முழுக்கம்ப நிலைக்கு கொடியினை உயர்த்தி ஏற்றி, அதன் பின்னரே இறக்க வேண்டும்.
தேசிய கொடியை மதிப்போம் இந்தியனாய் இருப்போம்.

Tuesday, September 17, 2013

வீட்டுமனையின் அளவுகள்: சதுரடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் (squarefeet ,cent,ground ) கணக்கிடும் முறை.

மக்கள் தங்கள் பணத்தை பல்வேறு முறைகளில்  சேமிக்கின்றனர். தங்கம்,பங்குச்சந்தை வைப்புநிதி,காப்பீடு என பட்டியல்  நீளும். அந்த வரிசையில் இப்போது அதிகம் பிரபலமாகி வருவது வீட்டுமனை வாங்குவதாகும். எங்கு பார்த்தாலும் திடீர் நகர்கள் உருவாகி இடம் விற்பனைக்கு வருகிறது. அதில் பலர் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு வரும் நிலங்களை அளக்க சதுர அடி, சென்ட், கிரவுண்ட் ஆகியவை அளவு முறைகளாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் அளவுகளே  பயன்படுத்தபடுகிறது. இவைகளில் சதுர அடியிலோ அல்லது சென்ட் அல்லது கிரவுண்ட் போன்ற ஏதேனும் ஒரு முறையில் அளவுகள் கொடுக்கும் போது அதை இன்னொரு அளவாக எப்படி கணக்கிடுவது என்று வெகு சிலரே தெரிந்து வைத்துள்ளனர் உதாரணத்திற்கு  வீட்டுமனை அளவை சதுரடியில் அளவுகள் கொடுத்தால் அது சென்ட் அளவில் எவ்வளவு இருக்கும் என கேட்டால் தடுமாற்றம் தான். அவ்வாறு தடுமாறும் ஒரு சிலருக்கான விளக்கமே இந்தப் பதிவு.
 பொதுவாக
வீட்டுமனையின்
நீள அகலங்கள்
அடிக் கணக்கில்
அளவிடப்படுகிறது.
உதாரணத்திற்கு
பின்வரும் படத்தினை
பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு வீட்டுமனையின் அளவுகள் இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின்படி அந்த இடம் மொத்தம் எவ்வளவு சதுர அடி உள்ளது என்பதை முதலில் காணக்கிட வேண்டும்.
 மொத்த சதுரடி கணக்கிடும் முறை: 

நீளமானாலும் சரி அகலமானாலும் சரி அதன் எதிரெதிர்  பக்கங்களின் அடி அளவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் நீளத்தை
எடுத்துக்கொள்வோம்.

அந்த இடத்தின்
இருபக்கங்களின்
நீளங்களை
கூட்டி அதை இரண்டால்
வகுக்க வேண்டும்.

அதேபோல் அதன்
அகலங்களையும் 
கூட்டி இரண்டால்
வகுக்க வேண்டும்.

அதாவது படத்தில்
காட்டியுள்ள அளவுகளின்படி நீளம்
67+63= 130
அதை இரண்டால்
வகுக்க வேண்டும்.
130÷2= 65
பின்பு அதன்
அகலங்கள் 
32+35 =67 
அதை இரண்டால் 
வகுக்கவும் .
67÷2= 33.5
இப்போது இதன்
இரண்டு விடைகளையும்
பெருக்கினால் வருவது
அந்த வீட்டுமனையின்
மொத்த சதுரடியாகும்
அதாவது
65×33.5= 2177.5  ஆக
2177.5  
  
சதுர அடி.
என்பதே அதன் 
மொத்த 
சதுரடி ஆகும். 
 மொத்த சென்ட் கணக்கிடும் முறை:

(1 ஏக்கர் = 100 சென்ட் அதாவது 1 ஏக்கர்=43560 சதுரடி) பொதுவாக 1 சென்ட் என்பது 435.6 சதுர அடியாகும். மேலே குறிப்பிட்டவாறு முதலில் மொத்த சதுரடியை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு மொத்த சதுரடியை 435.6 சதுரடியால் வகுத்தால் கிடைப்பது அந்த இடத்தின் மொத்த சென்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். படத்தில் உள்ள அளவின்படி அதன் மொத்த சதுரடி =2177.5 அதை 435.6 ஆல் வகுத்தால் வருவது :4.99 அதாவது அந்த வீட்டுமனையின் அளவு 4.99  சென்ட
 
மொத்த கிரவுண்ட்
கணக்கிடும் முறை:

ஒரு கிரவுண்ட் என்பது 2400 சதுரடி ஆகும் எனவே, மொத்த சதுரடியை 2400 ஆல் வகுத்தால் வருவது கிரவுண்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். 2177.5÷2400= 0.9072 அதாவது ஒரு கிரவுண்டுக்கும் சிறிது குறைவு.
 சரி இந்தப் படத்தில்
காட்டியுள்ளபடி
அளவுகள் இருந்தால்....
நீங்களே முயற்சி
செய்யுங்கள்.