Showing posts with label கொள்ளளவு. Show all posts
Showing posts with label கொள்ளளவு. Show all posts

Wednesday, December 17, 2014

தமிழ்நாட்டிலுள்ள அணைகளின் பட்டியல்

''நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் 
வான்இன்றி அமையாது ஒழுக்கு "
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது.தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது.
மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு மூல காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான்.நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம் . நதியின் பிறப்பிடம் அருவி . அருவியின் பிறப்பிடம் மலை உச்சி.வனம் அதிகம் இருக்கும் மலை உச்சியில் ஒரு வகையான மண் உள்ளது . அந்த மண், அங்கு விழும் இலைச் சருகுகளுடன் இணைந்து ஒரு புது வகையான மண்ணாக மாறிவிடுகிறது .அந்த மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் , அவ்வளவு மழைநீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது.பிறகு பிடித்து வைத்த மழை நீரை சொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது.இந்தச் சொட்டுகள் இணைந்து சிறு நீரூற்றாக மாறுகிறது.சிறு நீரூற்றுகள் இணைந்து அருவியாக மாறுகிறது.அருவி நதியாகிறது.
இந்த நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவதன் மூலம் நீர் கடலில் கலந்து வீணாகாமல் பாதுகாக்க முடிகிறது.''இயற்கையினை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்'' என்கின்றனர் சூழலியலாளர்கள்.எனவேதான், இயற்கையான நீர்வளத்தைப் பாதுகாக்க அணைகள் கட்ட வேண்டியுள்ளது.அவ்வாறு தமிழ்நாட்டில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

வ.எண்பெயர்ஆண்டுகொள்ளளவு
(மி.கன அடி)
மாவட்டம்
1.வீராணம் ஏரி பழைமை
-யானது
1465.00 கடலூர்
2செம்பரப்பாக்கம் ஏரிபல்லவர் காலம்3120.00காஞ்சிபுரம்
3.ரெட்கில்ஸ்(புழல் ஏரி)18563300.00திருவள்ளூர்
4.சோழவரம் ஏரி 1877881.00திருவள்ளூர்
5.வெலிங்டன் ஏரி19232580.00கடலூ‌ர்
6.பூண்டி நீர்தேக்கம்19443214.00திருவள்ளூர்
7.சாத்தனூர் அணை19587321.00திருவண்ணாமலை
8.கிருஷ்னகிரி அணை19581666.00தர்மபுரி
9.விடூர் அணை1959 605.00விழுப்புரம்
10.கோமுகிநதி  அணை 1965560.00விழுப்புரம்
11.மணிமுத்தாறுநதி  அணை1970737.00விழுப்புரம்
12.சின்னார் அணை1977500.00கோவை
13.பாம்பாறு அணை 1983500.00தர்மபுரி
14.தும்பளஹள்ளி  அணை 1983 131.00தர்மபுரி
15.வாணியாறு அணை1985418.00தர்மபுரி
16.கேசர்குழிஹல்லா  அணை1985134.00தர்மபுரி
17.சூலகிரி சின்னார் அணை198681.00கிருஷ்னகிரி
18.தொப்பையாறு அணை1986299.00தர்மபுரி
19.நாகவதி அணை1986134.00தர்மபுரி
20.கெலவரப்பள்ளி அணை1993481.00தர்மபுரி
21.ராஜாதோப்பு  அணை199720.00வேலூர்
22.மோர்தானா அணை2001261,00வேலூர்
23.மார்கண்டநதி அணை200587.23திருவண்ணாமலை
24.செம்பகத்தோப்பு அணை2007287.20திருவண்ணாமலை
25.வரட்டாறு வள்ளிமதுரை அணை 2007110.33தர்மபுரி
வ.எண்பெயர்ஆண்டுகொள்ளளவு  (மி.கன அடி)மாவட்டம்
26.ஆண்டியப்பனூர் ஓடை2007112.20 வேலூர்
27.பெரியாறுஅணை189715662.00கன்னியாகுமரி
28. பேச்சிப்பாறை அணை19065406.00கன்னியாகுமரி
29.பெருஞ்சாணி அணை 1952 2890.00 கன்னியாகுமரி
30.மணிமுத்தாறு அணை 1958 4047.00 திருநெல்வேலி
31.வைகை அணை 19596143.00மதுரை
32.சக்தியாறு அணை 196556.00மதுரை
33மஞ்சளாறு அணை1967477.00 தேனி
34.சிற்றாறு-I1972600.00 கன்னியாகுமரி
35.சிற்றாறு - II1972393.00கன்னியாகுமரி
36.கடனா நதி அணை1974352.00 திருநெல்வேலி
37.இராமாநதி அணை1974152.00 திருநெல்வேலி
38.பிளவக்கல் பெரியாறு  அணை1976192.00விருதுநகர்
39பிளவக்கல் கோவிலாறு அணை1976133.00விருதுநகர்
40.கருப்பாநதி அணை 1977185.00திருநெல்வேலி
41.மருதாநதி அணை1979189.00திண்டுக்கல்
42.குண்டாறு  அணை 198325.00திருநெல்வேலி
43.குல்லூர் சந்தை அணை1984127.00விருதுநகர்
44.வெம்பக்கோட்டை அணை1985399.00விருதுநகர்
45.ஆனைக்குட்டம் அணை1989126.00விருதுநகர்
46.கோல்வார்பட்டி அணை 1992176.00விருதுநகர்
47.நம்பியாறு அணை200082.00திருநெல்வேலி
48.பொய்கையறு அணை2000105.00திருநெல்வேலி
49.சோத்துப்பாறை அணை2001100.00தேனி
50.அடவிநயினார் அணை2003174.00திருநெல்வேலி
வ.எண்பெயர்ஆண்டுகொள்ளளவு.(மி.கன அடி)மாவட்டம்
51.வடக்குப்பச்சையாறு அணை 2003 442.00திருநெல்வேலி
52.கொடுமுடியாறு அணை2003122.00கரூர்
53.சண்முகாநதி அணை200479.56தேனி
54.நகரியாறு சாஸ்தாகோவில்200436.47விருதுநகர்
55.பவானிசாகர் அணை195532800.00ஈரோடு
56.குண்டேரிப்பள்ளம்1978108.00ஈரோடு
57.வரட்டுப்பள்ளம்1978140.00ஈரோடு
58.பெரும்பள்ளம்1990232.00ஈரோடு
59.அமராவதி அணை19584047.00கோவை
60.உப்பாறு அணை1968328.00ஈரோடு
61.பாலாறு பொருந்தலாறு அணை19781524.00திண்டுக்கல்
62.வட்டமலைக்கரை ஓடை1978268.00திருப்பூர்
63.பரப்பலாறு அணை 1974198.00 திண்டுக்கல்
64.குதிரையாறு அணை1990253.00திண்டுக்கல்
65.நொய்யல் ஆத்துப்பாளையம்1991235.00 கருர்
66.குடகனாறு அணை1993 434.00 திண்டுக்கல்
67.மேல் நீராறு197539.00கோவை
68.கீழ் நீராறு1982174.00கோவை
69.பரம்பிக்குளம் அணை196717820.00கோவை
70.தூணக்கடவு அணை1965557.00கோவை
71.பெருவாரிப்பள்ளம் 1971 620.00கோவை
72. ஆழியாறு அணை19623864.00 கோவை
73.திருமூர்த்தி அணை 19671935.00 கோவை
74.நொய்யல் ஒரத்துப்பாளையம்1992616.00 திருப்பூர்
75.வரதமாநதி அணை1978111.00திண்டுக்கல்
வ. எண்பெயர்ஆண்டுகொள்ளளவு (மி.கன அடி)மாவட்டம்
76.சோலையாறு அணை19715385.00கோவை
77.நங்கஞ்சியாறு அணை2007 254.27திண்டுக்கல்
78.நல்லதங்காள் ஓடை2007223.18 திருப்பூர்
79.மேட்டூர் அணை1934 95659.92சேலம்
80.காரியாகோயில் அணை1993190.00சேலம்
81.ஆனைமடுவு அணை1993267.00சேலம்
82.பொன்னியாறு அணை1974120.07கருர்
83.சித்தாமலை அணை1987227.00அரியலூர்
84.உப்பாறு அணை198680.16திருச்சி
85.இருக்கன்குடி அணை20095012.00விருதுநகர்
86.பாபநாசம் அணை19445500.00திருநெல்வேலி



கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது கி.பி.இரண்டாம் நூற்றாண்டு கரிகாலனால் கட்டப்பட்டது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது.கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்டது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது மேலணை என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும்.கீழணை என்பது கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. 

நீலகிரி மலையில் உள்ள அணைகள் மற்றும் நீர் மின் திட்டங்கள் குறித்தும் பொதுவான தகவல்களைத் தெரிந்து கொள்வோம். இம்மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு இரு பகுதிகளாகப் பிரிந்து வருகிறது. கிழக்குப் பகுதியில் முக்குறுத்தி, பைக்காரா, அணைகள் வழியாக சிஸ்கார நீர்மின் நிலையம், அதன் கீழே மோயர் நீர்மின் நிலையம் எனக் கடந்து பவானி அணையை அடைகிறது.
இன்னொரு பகுதி தென்மேற்குத் திசையில் பயணித்து குந்தா 1,2,3,4,5 என நீர் மின் நிலையங்களை கடந்து மேட்டுப்பாளையம் வழியாகப் பாய்ந்து பவானி அணையில் சேர்கிறது -நீலகிரி மலையில் இருபதுக்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன.
அவற்றில் சில.

1.முக்குறுத்தி அணை
2.பைக்காரா அணை
3.சாண்டிநல்லா அணை
4.கிளன்மார்கன் அணை
5.மாயார் அணை
6.அப்பர்பவானி அணை
7.பார்சன்ஸ்வேலி அணை
8.போர்த்தி மந்து அணை
9.அவலாஞ்சி அணை
10.எமரால்டு அணை
11.குந்தா அணை
12.கெத்தை அணை
13.பில்லூர் அணை
14.மரவகண்டி அணை 

இன்னும் சில.... 
பொள்ளாச்சி 
15.காடம்பாறை அணை 
தேனி 
14.ஹைவேவிஸ் அணை 
15.மணலாறு அணை 
16.தூவாணம் அணை 
17.வெண்ணியாறு அணை 
18.இரவங்கலாறு அணை 
இவை மட்டுமல்லாமல் இன்னும் நிறைய அணைகள் உள்ளன.மழை நீரை சேமிப்போம்.நீர் வளம் காப்போம்.