Tuesday, July 9, 2013

கோபம்


கோபம்
இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு.
பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை
இழந்ததும் உண்டு.
பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது
உடல் ரீதியாக,
மன ரீதியாக,
சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த
பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை (நம்மைவிட
எளியவர்கள் என்று
நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத
போது...

நாம் சொல்வது (தவறாகவே
இருந்தாலும்)
தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும்
போது...

எதிர்பார்த்த
மரியாதை
கிடைக்காத போது...

இப்படி பல
காரணங்கள்

கோபப்படுவது
என்பது
சுவரில் ஆணி
அடிப்பது மாதிரி.
நாம் என்னதான்
ஆறுதல் சொல்லி ஆணியை பிடுங்கினாலும்
சுவரில் ஏற்பட்ட
காயம் மாறாது.
எனவே கோபமே
வராமல் பார்த்துக்கொள்வது
தான்
நல்லது.
கோபத்தை நாம்
நிறுத்தி விட்டாலும், அதன் விளைவுகளை நம்மால் அழிக்க முடியாது” மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செயல்படுவதை
தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை
உண்டாக்கி
உயிரைப் பறித்து
விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள.
55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால்
அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய
ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை
திடீரென
சிதைப்பதால்,
அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும்.
இது மாரடைப்பில்
விட்டு விடும்.

இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு,
உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா
எனப்படும்
நிலையற்ற
நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால்
ஏற்படும் விளைவுகள் தான்.

மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.

ஆக, கோபம்
உங்களை
அழிப்பதற்கு முன்
நீங்கள் அதை
அழித்து விட
வேண்டியது
முக்கியம்.

அது சரி
போட்டோவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறிங்களா?
போட்டோவ
நல்லா பாருங்க கோபம்னு பார்த்தா கோபம்
அரவணைப்புனு
பார்த்தா அரவணைப்பு.

No comments:

Post a Comment