Showing posts with label பீஷ்மர். Show all posts
Showing posts with label பீஷ்மர். Show all posts

Saturday, January 4, 2014

மகாபாரத புதிர்கள்


மனிதர்கள் தனக்கு உரிமையானதை விட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை பல்வேறு நிலைகளில் விளக்குவதே ராமாயணம், விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே மகாபாரதம், இரண்டும் மனிதர்கள் எப்படிநடந்து கொள்ள வேண்டும் என்பதையே கவனப்படுத்துகின்றன
எத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதும், தருமம் வெற்றி பெறும் ஆயினும், தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல என்பதும் மகாபாரதம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.
மகாபாரதத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட எத்தனையோ பேர் வீழ்த்தப்பட்டனர் ஆனாலும் ஒரு சிலர் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். அந்த வகையில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட இவர்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
1.ஜெயத்ரதன்
துரியோதனனின் தங்கை துச்சலையின் கணவன், சைந்தவ அரசன். இவனது தலையை யார் தரையில் வீழ்த்துகிறார்களோ அவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்னும் ஒரு வரத்தைப் பெற்றவன். இவன் தலையை அர்ஜுனன் கொய்தான். ஆனால் அர்ஜுனன் இறக்கவில்லை. ஏன் என்று தெரியுமா?
2.பீஷ்மர்
இவர் இறப்பை இவரே முடிவு செய்யும் வரத்தைப் பெற்றவர். இவர் அர்ஜுனன் மீது எய்த சக்தி வாய்ந்த நாராயணாஸ்திரம் அர்ஜுனனை தாக்காமல் கிருஷ்ணரைத் தாக்கியது ஏன்? இவர் எவ்வாறு வீழ்ந்தார்?
3.துரோணர்
இவர் பாண்டவர் கௌரவர்களுக்கு குரு. கௌரவர் படையை வழி நடத்தினார். பாண்டவர்கள் தங்கள் குருவையே எவ்வாறு வீழ்ந்தினர்?
4.கர்ணன்
கௌரவர் படைக்கு தலைவர். பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் மற்றும் இயற்கையான கவச குண்டலங்கள் போன்ற சகல சிறப்புகளையும் பெற்றவன். அர்ஜுனனுக்கு நிகரானவன். வீழ்த்தப்படவே முடியாமல் இருந்த இவன் எப்படி வீழ்ந்தான்?
5.துரோணரின் மகன்
கௌரவர்படையை கடைசியாக வழி நடத்தியவன். சாகா வரம் பெற்றவன். இன்னும் உயிருடன் இருப்பதாக கருதப்படும் இவன் யார்?
6.ஜெராசந்தன்
கிருஷ்னரையே போரில் வென்றவன். இவன் எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாதவன் இவனுக்கு பயந்து கண்ணன் மதுராவிலிருந்து துவாரகைக்கு இடம் பெயர்ந்தார். இத்தனை பலம் கொண்ட இவனை பீமன் எவ்வாறு வீழ்த்தினான்?
இந்தக் கேள்விகளுக்கான தீர்வுகளை பதிந்தால் உடனே படித்துவிட்டு மறந்து விடுவது நம் இயல்பு. நமது தேடல்கள் அத்துடன் முடிந்துவிடும். அவ்வாறு உங்கள் தேடல் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்த சிக்கல்கள எவ்வாறு தீர்கப்பட்டது என பதியவில்லை.
எந்த ஒரு நாட்டின் கலாச்சாரமும் பண்பாடும் வரலாறும் அந்த நாட்டின் இலக்கியங்கள், இதிகாசங்கள் மூலமாகவே அறியப்படுகிறது. அவ்வாறான இலக்கியங்களையும் இதிகாசங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செலவது இந்தத் தலைமுறையின் தலையாய கடமையாகும். அதற்கு நாம் இவைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். உங்கள் தேடல் தொடரட்டும்