Showing posts with label வகைகள். Show all posts
Showing posts with label வகைகள். Show all posts

Wednesday, November 12, 2014

MicroSD card மெமரிகார்ட்


மைக்ரோ எஸ்டி ,
மெமரிகார்டு வாங்கும்போது
 கவனிக்க வேண்டிய
 முக்கியமான தகவல்! 

“மெமரி கார்ட்” இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் 
பயனர்களே இருக்க முடியாது. 
வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,
பாடல்களை சேமிக்க, 
படங்களை சேமிக்க,
பேசியதை சேமித்து வைக்க,
இப்படி பல வகைகளில் நமக்கு 
உதவுகிறது  மெமரிகார்ட்.
முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட 
மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து 
விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் 
யனபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக லேப்டாப், 
டேப்ளட் பிசி, 
ஸ்மார்ட் போன்,
ஐபாட்,
டிஜிட்டல் கேமரா
போன்ற கையடக்கச் சாதனங்களைச்
சொல்லாம். 
காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு 
ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு 
வகையான கொள்ளளவு, 
திறன், அளவு 
ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது. 
காலத்திற்கேற்ப இதனுடைய 
தன்மையிலும், வகைகளிலும் 
மாறுபட்டிருக்கிறது. 
ஆங்கிலத்தில் microSD card என்று 
சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை 
உலக அளவில் பார்க்கும்போது 400க்கும் 
அதிகமான நிறுவனங்கள் தயாரித்து 
வெளியிடுகின்றன.
மெமரி கார்டின் வகைகள்:
எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் 
இதில் உள்ளன. குறிப்பாக 
இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO
SD CARD என்பது ஒரு 
சாலிட் ஸ்டேட் டிவைஸ். 
இதில் நகரும் பகுதிகள் 
எதுவும் இல்லை. 
முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் 
முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.
SDHC கார்ட்களைவிட SD, SDXC 
வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி 
திறன் கொண்டது.
மெமரி கார்டின் அளவுகள்:
பொதுவா SD cards மூன்று வகையான 
அளவுகளில் கிடைக்கின்றன. 
இவைகள்  ஸ்டான்டர்ட் ஆகும் .
அவை.
1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)
எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் 
திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட 
SD, SDHC மற்றும் SDXC 
என குறிப்பிடுகின்றனர்.
எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து,
எடுக்கப்படும் வீடியோவின் 
தரமும் அமையும். 
காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் 
அதிகமாக கையகப்படுத்துவதால்தான். 
இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு 
MB தகவல்கள் எழுதப்படும். 
அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். 
இந்த வேகத்தில் தகவல்கள் எழுத 
முடிவதால் தெளிவான படங்கள், 
வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை 
நாம் பெற முடியும்.
அனைத்து SD கார்ட்களிலும் CPRM 
என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. 
CPRM என்பதின் விரிவு 
Content Protection for Rஊcordable Media
என்பதாகும்.

SD கார்டின் சிறப்பு;
இதன் மிகச்சிறந்த பயன்பாடே, 
பத்தாயிரத்துக்கும் 
அதிகமான முறை தகவல்களை அழித்து, 
மீண்டும்  எழுத முடியும் என்பதுதான்.
ஒவ்வொரு முறையில் தேவையில்லாத 
அல்லது பழைய டேட்டாவினை அழித்து 
புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். 
இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான 
பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே 
செய்ய முடியும்.
பிராண்டட் SDcards ஒருசில…
Sasmung microSD card
Sandisk Ultra microSD card
Transcend microSD card
Sandisk mobile ultra
Toshiba microSD card
Sony microSD card
இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 
microSD Card கள் உள்ளன.
மெமரிகார்ட் என்றால் Dataக்களை 
பதிந்து வைக்க பயன்படும் 
ஒரு நினைவக அட்டை என்றும் 
அது 4,8,16,32GB என்ற அளவுகளில் 
கிடைக்கிறது. 
இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை 
பற்றி தெரிந்து வைத்திருக்கும் விஷயம்.
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள 
மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் 
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட 
வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து
கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய 
அறிவை நாம் பெற்றிருப்பது 
முக்கியம்.

மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய 
விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு
நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10
என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு 
அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் 
இதுதான் இந்த விலை பட்டியலுக்கு 
காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் 
தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் 
அந்த memory cardனுடைய class என்று
குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு 
மெமரிகார்டின் data transfer speedஐ
குறிக்கும் code ஆகும்.
4 என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு 
இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் 
fileஐ transfer செய்யும் தன்மையை 
பெற்றிருக்கும்
class 6 – 6MB per second
Class 8 – 8MB per second
Class 10 – 10MB per second 
என்ற வேகத்தில் dataக்களை 
பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய 
விலை நிர்ணயிக்கப்படுகிறது