Monday, October 28, 2013

செல்போன் பயன்பாடு ஒரு பார்வை









இருபத்தியயோராம் நூற்றாண்டில் உலக மக்களளை தன்வயப்படுத்திக் கொண்டே ஒரு சாதனம் என்றால் அது செல்போனாகத்தான் இருக்க முடியும். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிப்பேர் இந்த செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்றால் அது மிகையாகாது. செல்போனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது நாகரிகத்தின் வளர்ச்சி என சித்தரிக்கப்படுகிறது. செல்போனின் செயல்பாட்டை முறையாகப் பயன்படுத்துவது வாடிக்கையாளரான நம் கையில் தான் உள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது மூத்தோர் வாக்கு. அதிலும் செல்போனை தன் உடலின் ஒரு பாகமாகவே இணைத்துக் கொண்டவர்கள் நம்மில் பலர் உள்ளனர். செல்போனை அதிகம் பயன்படுத்துவதனால் உண்டாகும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துக்கூற இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் ,அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நம்மில் பலர் இல்லை என்பது உண்மை.
உலக நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுக்கள் செய்த ஆய்வின் முடிவில் செல்போனால் உண்டாகும் மின்காந்த அலை கதிர்வீச்சால் மூளையில் கிளையோமா (Glioma) எனப்படும் கட்டி ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் (WHO) சார்பில் இயங்கி வரும் International Agency for You Research on Cancer  என்ற புற்றுநோய் ஆராய்ச்சிக்குழு செல்போன் உபயோகிப்போருக்கு ஏற்படும் பலவிதமான நோய்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து, செல்போனை மிக அதிகமாக உபயோகிப்போர்க்கு புற்றுநோய் (CANCER) வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது. 11 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் அடங்கிய ஆலோசனைக்குழு மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சிக்குப் பின், செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் மின்காந்த அலைகள் மனிதனுக்கு புற்று நோயை  உண்டாக்கும் என்று நிரூபித்துள்ளனர். குழந்தைகள்,சிறுவர்/சிறுமிகளை மின்காந்த அலைகள் அதிகம் தாக்கி புற்றுநோயை தோற்றுவிக்கின்றன. காரணம் குழந்தைகளுடைய மண்டையோடானது (Skull) மிகவும் இலேசாக இருப்பதே. எனவே, பாதிப்பு அதிகம் ஏற்படும்.
கர்ப்பினிகள் அதிக நேரம் பேசினால் கருவில் இருக்கும் சிசுவின் மூளைவளர்ச்சி பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பல கட்டங்களின் ஆய்வின் முடிவில் செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தித்திறன் குறையும் என்று தெரிவித்துள்ளனர். செல்போனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்: 1.காது மந்தம் (Hard of Hearing ) 2.மறதி நோய் ( Loss of Memory ) 3.மூளைப்புற்று நோய் (Glioma) 4.மூட்டுவலி (Joint Pain) 5.தலையில் வெப்பம் அதிகரித்து ரத்தம் சூடேறி உடல் உறுப்பகள் செயல்பாடு  பாதிப்பு. செல்போன் பாதிப்புகளை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் : 1.இயர் போன்(EAR PHONE) மற்றும் காலர் மைக்(COLLAR MIC) பயன்படுத்தி பாதிப்புகளை குறைக்கலாம். 2.செல்போனை சட்டைப் பையிலோ கால்சட்டைப்பையிலோ வைப்பதை தவிர்ப்பது நல்லது. 3.நாம் படுத்திருக்கும் போது அருகில் செல்போனை வைத்து சார்ஜ் செய்யக்கூடாது.அவ்வாறு சார்ஜ் செய்யும் போது மின்காந்த கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். 4.வீட்டின் தரைவழி தொலைபேசி இருக்குமானால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். 5.குறைந்த கதிர்வீச்சு உள்ள செல்போனைத் தேர்வு செய்யலாம். 6.செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாமல் முடிந்தவரை பேசுவதை தவிர்த்து குறுஞ்செய்தி (SMS)அனுப்பலாம். 7. செல்போனை காதுமடலுக்கு அருகில் வைத்து பேசும் போது அதன் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சற்று தள்ளி பேசுவதே நல்லது. 8.கூடுதல் நேரம் பேச நேரிட்டால் ஸ்பீக்கர்(Speaker) வசதியை பயன்படுத்தலாம். 9.தூங்கும்போது அருகில் செல்போனை வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது. 10.சிக்னல்(Signal) குறைவாக உள்ள இடத்தில் செல்போனை பயன்படுத்தக் கூடாது. 11.குழந்தைகள் விளையாட்டுக்காக செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். 12.சார்ஜரில்(Charger) போட்டுக்கொண்டும், வாகனம் ஓட்டிக்கொண்டும், இடி,மின்னல் இருக்கும் நேரத்திலும் செல்போனை பயன்படுத்துவது ஆபத்தானதாகும். மேற்கூறியவை அனைத்தும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான வழிகள்  என்பதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். செல்போன் நமது வாழ்க்கையின் அன்றாடத் தேவைக்கு அவசியமாகிவிட்ட போதிலும்,அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை உணர்ந்து கவனமாக பயன்படுத்துதல் நம் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. * செல்போன் என்பது தகவல் பரிமாறிக் கொள்ளவதற்கு மட்டுமே ஒழிய அது கலந்து உரையாட அல்ல*

No comments:

Post a Comment