Showing posts with label சர்வதேச பாதுகாப்பு குறியீடுகள். Show all posts
Showing posts with label சர்வதேச பாதுகாப்பு குறியீடுகள். Show all posts

Friday, April 25, 2014

பாக்கெட் முத்திரைகள் மற்றும் குறியீடுகள் (PACKING SYMBOL AND SIGNS )

நாம் அன்றாடம் பல 
வகையான பொருட்களை 
வாங்கி உபயோகிக்கிறோம்.
மின் சாதனப் பொருட்கள்,
உணவுப் பொருட்கள்,
குடிநீர் பாட்டில்கள்,செல்போன்,
மெமரிகார்ட்,பென்டிரைவ்,
உடுத்தும் துணி வரை 
ஏராளமான பொருட்களை  
நாம்  கடைக்குச் சென்று  
வாங்குகிறோம்.அவை 
உள்நாட்டில் 
தயாரிக்கப்பட்டவையாகவோ 
(அ) வெளிநாட்டில்
தயாரிக்கப்பட்டவையாகவோ 
இருக்கலாம். பேக் 
(PACK) செய்யப்பட்ட 
அப்பொருள்களின் அட்டைப்பெட்டி 
அல்லது டப்பாக்களின் (TIN)
மீது பல்வேறு
குறியீடுகள் (SYMBOL or SIGN)
இருப்பதை பார்த்திருப்போம்.
அக்குறியீடுகள் 
எதைக்குறிக்கின்றன.அவை 
அப்பொருளின் 
தரம், உபயோகமுறை,
உபயோகித்த பின் 
அப்பொருளை 
என்ன செய்ய வேண்டும்
என்பன போன்ற 
விளக்கங்களையே குறிக்கிறது.
இத்தகைய குறியீடுகள் 
ஆயிரக்கணக்கில்
உள்ளன. 
இவை யாரால் ஏன் தரப்படுகிறது?
ஒரு பொருளை உற்பத்தி செய்பவர் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் தரமானதுதானா என்பதை  நுகர்வாளருக்கு எப்படி தெரிவிப்பது? அப்பொருளைப் பற்றி அவர் விளம்பரம் செய்யலாம் ஆனால் விளம்பரத்தின் மூலம் இவர் சொல்வதை நுகர்வாளர் நம்பலாம் அல்லது நம்பாமலும் போகலாம்.எனவே உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் ஒரு நபர் தேவைபடுகிறார் .அவர்தான் இந்த சான்றிதழ் (குறியீடு) வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களே நமக்கு குறியீடுகள் (SIGN & SYMBOL) மூலம்  உணர்த்தப்படுகின்றது.
அவை  முக்கியமாக 
•தயாரிப்பு தரம்•
( Product Quality )
•தர நிர்வாக முறை•
(Quality Management
System)
•சுற்றுசூழல் மேலாண்மை.
Environment Management
•பாதுகாப்பு முறை•
(Safety System )
போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
அவற்றில் ஒரு சிலவற்றை இப்போது காண்போம்.
 ஒவ்வொரு நாடும் 
தரநிர்ணய முறைக்கு
தங்களுக்கென
தனித்தனி கோட்பாடுகளைக் 
கொண்டுள்ளன.
    உதாரணமாக இந்தியா 
"இந்திய தர நிர்ணய 
ஆணையம் " 
(BUREAU OF INDIAN 
STANDARDS)
என்ற அமைப்பின் மூலம் 
சான்றிதழ்கள் வழங்குகிறது.
அவைகளை முதலில் 
பார்ப்போம்.
இந்தியாவில் வழங்கப்படும் 
தரச்சான்று
மற்றும் அதன் குறியீடுகள்
1. ISI
இந்திய தரக்கட்டுப்பாட்டு மையம் (INDIAN STANDARD INSTITUTE ) தொழிலக உற்பத்திப் பொருட்கள் (Industrial Products )
2. BIS HALLMARK
தங்கம் மற்றும் வெள்ளி (GOLD and SILVER )
3.FSSAI
பாதுகாப்பான உணவுப்பொருள் (Food Safety and Standards Authority of India)
4.AGMARK
அனைத்து விவசாய பொருட்கள் (Agricultural Products)
5.SILK MARK
தூய பட்டு (PURE OF SILK)
6.INDIA ORGANIC
ஆர்கானிக் (உயிர்ம) பொருட்கள் (Non Chemical)
7.FPO
பழரசப் பொருட்கள் (Food Processed Order)
8.NON POLLUTING VEHICLE
மாசுக் கட்டுப்பாடுடைய வாகனம்
9.ECO MARK
சுற்றுச் சூழலியல. மேலும்,
•AYUSH MARK
இயற்கை நல மருந்துகள்(Herbal Products)
•TOXICITY MARKS
நச்சுத் தன்மையுடைய பொருள் என பல தரச்சான்றுகளை வழங்குகிறது. இவ்வமைப்பின் மூலம் வழங்கப்படும்  முத்திரையானது (SIGN) நுகர்வோர்களுக்கான இந்தியப் பொருட்களின் தர உத்திரவாதத்தை வழங்குகிறது.
உலக நாடுகள்,
NATIONAL INSTRUMENTS 
(NI) எனப்படும்
மின் 
(Electrical),
மின்னணு 
(Electronic),
மின் காந்ந 
(Electromagnetic) 
மற்றும்
வெடிக்கும் 
(Explosives) 
தன்மையுடைய
பொருட்களுக்கான தர
உத்திரவாதங்கள் 
(Certificate)
பல அடிப்படைகளில்
வழங்கப்படுகின்றன.
அவற்றில் சில :
  EMC
(ElectroMagnetic Compatibility ) மின்காந்த ஒத்திசைவு 
EMI
(Electromagnetic Interference ) மின்காந்த குறுக்கீடு
QMS/EMS
(Quality/Environmental Management Systems) தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவற்றை வழங்கும் நாடுகளும் அதன் குறியீடுகளையும் (Sign) பார்ப்போம் பின்வரும் படத்தைப் பாருங்கள்
 
(இவை நமது நாட்டின் 
ISI  முத்திரை போன்றது)
     FCC: அமெரிக்கா
FEDERAL COMMUNICATION
COMMISSION
(American EMI) 
    CE: ஐரோப்பா
EUROPEAN CONFORMITY
(European Union EMC and
Safety) 
    RoHS: ஐரோப்பா
(Restriction Of
the use of certain
Hazardous Substances) 
கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம்
    VCCI: ஜப்பான்
(Voluntary Control 
Council of  
Interference)
    CSA: கனடா
(Canadian Standards 
Association)
    EX: ஐரோப்பா
EXPLOSIVES
(European Union Hazards Location)
    NATA: ஆஸ்திரேலியா
(National Association 
of interference 
Testing Authority)
    ! or ESUI : பொது
(Global Sign) தகவல் 
(அ) குறிப்புகள்
(Essential Safety & 
Usage Information) 
  IC(or)CANADA : கனடா 
(Canada Industries)
      UL: அமெரிக்கா (Underwriters Laboratory) North American Hazardous Locations and Product (Safety)
     GS : ஜெர்மன்
German Safety
      Rounded (e) and Number: சீனா
China RoHS
(Restriction Of the use of certain Hazardous Substances) (இதில் உள்ள எண்கள் வருடத்தை குறிக்கும்) Number Stands In Year
      KCC: கொரியா
(Korea Communications Commissions)
     CCC :சீனா
China Compulsory Certificate (Safety)
   RCM/C-Tick:ஆஸ்திரேலியா Australian/New Zealand EMC (Electronic Products)
      PSE :ஜப்பான்
(Product Safety Electrical Appliances)
      Demko (or) VDE : ஐரோப்பா-ஜெர்மனி (Verband Duetscher Elektrotechniker) European Union Product Safety Certification
      A-Tick :ஆஸ்திரேலியா Australian/New Zealand EMC (Communication Products)
       ISO 9001:சர்வதேச அமைப்பு INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION. சர்வதேச தர நிர்வாக முறைமைக்கான சான்றிதழ். தரமான உற்பத்தி முதல் விற்பனைக்குப்பின் சேவை வரை இதில் அடங்கும்
       ISO14001 :சர்வதேச அமைப்பு INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION. சர்வதேச சுற்றுச் சூழல் முறைமைக்கான சான்றிதழ்
       IEC : சர்வதேச ஆய்வக  அமைப்பு (INTERNATIONAL ELECTROMAGNETIC COMPLIANCE)  ஆய்வக அங்கீகாரம்
பொது        :  IEC
ஐரோப்பா   :  EN
அமெரிக்கா :  UL
கனடா        :  CSA
WEEE:குப்பைத் தொட்டியில் பெருக்கல் குறியிடப்பட்டது (Waste Electrical and Electronics Equipment ) கழிவு விதிமுறையை பின்பற்ற அறிவுறுத்துகிறது.
இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்.
கடல் வழி செல்லும் பொருள்களுக்கான தர உத்திரவாதம் DNV,RINA,LR,VERITAS போன்றவை. (Marine Approval இவை வெவ்வேறு நாடுகளின் குறியீடுகளாகும்)
ரேடியோ அலைவரிசை தகவல் தொடர்பு அலைவரிசை போன்றவைகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் (எழுத்து) குறியீடுகள்:
    ERM : Electromagnetic compatibility and Radio spectrum Matters
     SRD :
Short Range Devices (இதை அதிகமாக செல்போன்களில் காணலாம் )