Friday, December 6, 2013

என்னைக் கவர்ந்த பாடல்






தேசப்பற்றுமிக்க
பாடல்களை 
கேட்பதென்பது தற்போது
அரிதாகி வருகிறது.
அந்த வகையில் துப்பாக்கி படத்தில் வெளிவந்த "மெல்ல விடைகொடு விடைகொடு மனமே" -என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இராணுவத்திலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்து பின் பணிக்குத் திரும்பும் ஒரு இராணுவ வீரனின் மனதை பிரதிபலிப்பதாக அது அமைந்திருந்தது. தன் தாய் தந்தை, மனைவி, குழந்தை, உறவினர் மற்றும் நண்பர்களை விட்டுச் செல்லும் போது ஏற்படும் ஏக்கம் பாடலைக் கேட்கும்போது நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.தன் தாய் தன்னை இராணுவத்தில் இருக்கிறான் என்பதை பெருமையாக சொல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் சொல்லப்பட்டுள்ளது. இப்பாடலை இசையோடு கேட்கும்போது நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் அவர்கள் அனுபவிக்கும் இந்த வலிகளை எல்லாம் கடந்து வந்தது தான் எனும் போது நம் மனதிலும் வலி ஏற்படத்தான் செய்கிறது.
படம் : துப்பாக்கி
பாடியவர்கள் : கார்த்திக்,சின்மயி இசை : ஹாரிஸ் ஜெயராஜ் வரிகள் : பா. விஜய்



மெல்ல
விடை கொடு விடை
கொடு மனமே
இந்த நினைவுகள்
நினைவுகள் கனமே
தாய்
மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம் 
இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே 
 
சில அழகிய
வலிகளும் தருதே 
 
போகின்றோம் 
 
போகின்றோம் 
தூரம் தூரம்
ஒ ஒ ஹோ ஒ ஒ
ஹோ எனை விட்டு
செல்லும் உறவுகளே 
 
ஒ ஒ ஹோ ஒ ஒ
ஹோ உயிர்
தொட்டு செல்லும்
உணர்வுகளே 
 
போய் வரவா 
நண்பன் முகம் நெஞ்சில்
நடந்து போகும் 
 
காதல் தென்றல் கூட
கடந்து போகும் 
 
இப்பயணத்தில் 
 
உன் நினைவுகள் 
 
நெஞ்சடைக்குமே 
 
காடு மலை செல்ல
துவங்கும் போதும் 
 
நெஞ்சில் சொந்தங்களின்
நினைவு மோதும் 
 
கைக்குழந்தையை 
 
அணைக்கவே 
மெய்
துடிக்குமே 
 
ஆயிரம் 
 
ஆயிரம் 
எண்ண
அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு 
 
ஆயினும் 
 
ஞாபகம் 
 
உயிர்
துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு 
 
போய் வரவா 
 
 
எங்கே மகன் என்று
எவரும் கேட்க 
 
ராணுவத்தில் என
தாயும் சொல்ல 
 
அத்தருணம் போல் 
 
பொற்பதக்கங்கள் 
 
கை கிடைக்குமா 
 
நாட்டுக்கேன்றே தன்னை
கொடுத்த வீரம் 
 
ஆடை மட்டும்
வந்து வீடு சேரும் 
 
அப்பெருமை போல் 
 
இவ்வுலகிலே வேறு
இருக்குமா 
 
தேசமே 
 
தேசமே 
 
என் உயிரின் உயிரின் 
உயிரின் தவமாகும் 
 
போரிலே 
 
தாயகம் 
 
என் உடலின் உடலின் 
உடலின் வரமாகும் 
 
போய்  வரவா 
 
போய் வரவா
(மெல்ல
விடை கொடு விடை
கொடு ) 

No comments:

Post a Comment